Home
Mobile

யாரு சாமி அவன்.. 16GB ரேம்.. OIS கேமரா.. 120W சார்ஜிங்.. 6100mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

பிரீமியம் போனுனா இப்படி இருக்கனும் என்று மூக்கில் விரல் வைக்கும்படி 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6100mAh பேட்டரி, விசிஎஸ் பயோனிக் கொண்ட டூயல் கேமரா சிஸ்டம், 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி மெமரி போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் ஐக்யூ நிறுவனத்தின் ஐக்யூ நியோ10 ப்ரோ (iQOO Neo10 Pro) வெளியாகி இருக்கிறது. விவரம் இதோ

ஐக்யூ நியோ10 ப்ரோ அம்சங்கள் (iQOO Neo10 Pro Specifications): இந்த ஐக்யூவில் அல்ட்ரா பிரீமியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் சிப்செட் மற்றும் கிராபிக்ஸ் கார்டு மட்டுமல்லாமல், கேமிங் என்ஹான்ஸ்மெண்ட் கொடுக்கும்படி பிரத்யேக சிப்செட் கிடைக்கிறது. ஆகவே, ஓர்ஜின்ஓஎஸ் 5.0 (OriginOS 5.0) கொண்ட டைமன்சிட்டி 9400 3என்எம் (Dimensity 9400 3nm) சிப்செட் வருகிறது.

யாரு சாமி அவன்.. 16GB ரேம்.. OIS கேமரா.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS), இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (Immortalis G925 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஐக்யூ கியூ2 (iQOO Q2) கேமிங் சிப்செட் கிடைக்கிறது. ஆகவே, கேமிங் பர்ஃபாமென்ஸ், ஆப் பர்ஃபாமென்ஸ் மற்றும் ரேம் பர்ஃபாமென்ஸ் பட்டையை கிளப்பும்படி இருக்கும். ஏனென்றால், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட் இந்த மாடலில் இருக்கிறது.

இதுபோக 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் கிடைக்கின்றன. ஆரம்பமே 12 ஜிபி ரேம் கொண்டிருப்பதால், கேமிங் அவுட்புட் எப்படி இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். சிப்செட் இருந்தால் போதுமா கேமிங்குக்கு பேட்டரி முக்கியம் பாஸ் என்பது புரிகிறது.

இதற்கும் ஐக்யூ நியோ10 ப்ரோ போன் பட்டையை கிளப்பிவிட்டு இருக்கிறது. ஏனென்றால், சில நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளும்படி 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த சார்ஜிங்குக்கு ஏற்ப 6100mAh பெரிய பேட்டரி பேக் செய்துள்ளது. 1.5K ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்டிபிஓ அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு 6.78 இன்ச் (2800×1260 பிக்சல்கள்) பேனல் இருக்கிறது. கேமிங் மற்றும் வீடியோ அவுட் கொடுக்க 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது. அவுட்டோர் பிரைட்னஸ் எதிர்பார்க்கும்படி 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஐக்யூவின் விசிஎஸ் பயோனிக் (VCS Bionic) கேமரா அவுட்புட் கிடைக்கிறது.

ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் ஐஎம்எக்ஸ்921 (IMX921) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவை பேக் செய்துள்ளது. இந்த நியோ10 ப்ரோ போனில் 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் அண்டர்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் கிடைக்கிறது.

இந்த ஐக்யூ நியோ10 ப்ரோ போனானது, சீன மார்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் வரும் வாரங்களில் வெளியாக இருக்கிறது. இந்த ஐக்யூவின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.40,860ஆக இருக்கிறது. அதேபோல 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலின் விலை ரூ.50,215ஆக இருக்கிறது. இந்தியாவில் இதே பட்ஜெட்டில் கிடைக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo10 Pro With Dimensity 9400 16GB RAM Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X