மே.20 குறிச்சாச்சு.. மிட்-ரேஞ்ச்ல 7000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஐக்யூ பிரியர்கள் அறக்க பறக்கும்படியான பட்ஜெட்டில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா போன்ற பீச்சர்களுடன் கியூ2 கேமிங் சிப் கொண்ட மாடலாக ஐக்யூ நியோ10 ப்ரோ பிளஸ் (iQOO Neo10 Pro Plus) வெளியாக இருக்கிறது. இப்போது, வெளியீட்டு தேதி அதிகார்ப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது. இந்த தேதியில் ஐக்யூ பேட் 5 சீரிஸ் (iQOO Pad 5 Series) மாடல்களும் வெளியாக இருக்கின்றன. இந்த மாடல்களில் என்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம்?
மே 20ஆம் தேதி ஐக்யூ நியோ10 ப்ரோ பிளஸ், ஐக்யூ பேட் 5 மற்றும் ஐக்யூ பேட் 5 ப்ரோ ஆகிய மாடல்கள் வெளியாக இருக்கின்றன. சீன மார்கெட்டில் வெளியாக இருக்கும் இந்த மாடல்களில் ஐக்யூ நியோ10 ப்ரோ பிளஸ் போனானது ஒட்டுமொத்த ஐக்யூ பிரியர்களின் எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் பிரீமியம் கேமிங் மாடலாக இது வெளியாகிறது.

பிஎம்டபுள்யூ எம் மோட்டார்ஸ்போர்ட் எடிஷனில் கிடைக்க இருப்பது அதன் டிசைனை பார்த்தாலே தெரிகிறது. மேலும், 2K ரெசொலூஷன் கொண்ட பிளாட் டிஸ்பிளே மற்றும் கியூ2 கேமிங் சிப்செட் கொண்ட மாடலாக இது வெளியாக இருக்கிறது. இதுபோக ஃபிளாக்சிப் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை இது பேக் செய்கிறது. என்னென்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம்.
ஐக்யூ நியோ10 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (iQOO Neo10 Pro Plus Specifications): இந்த ஐக்யூ போனின் முழு பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துவிட்டன. ஆகவே, 2K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.82 இன்ச் பிளாட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதுபோக கேமிங் அவுட்புட் என்ஹான்ஸ்மெண்ட கொடுக்க கியூ2 சிப்செட் கிடைக்கிறது.

பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எஸ்ஓசி (Octa Core Qualcomm Snapdragon 8 Elite SoC) கிடைக்க இருக்கிறது. லேட்டஸ்ட் ஐக்யூ மாடல்களில் கிடைக்கும் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் + 50 எம்பி அல்ட்ரா வைடு கொடுக்கிறது.
இந்த ரியர் கேமராவில் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ஐக்யூ நியோ10 ப்ரோ பிளஸ் கொடுக்க இருக்கிறது. இதுவொரு கேமிங் மாடலாக இருப்பதால், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி வருகிறது. மேலும், ஆன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற பீச்சர்கள் வர இருக்கின்றன.
டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் வெளியான தகவலின்படி இந்த ஐக்யூ நியோ10 ப்ரோ பிளஸ் போனின் விலை ரூ.35,310 பட்ஜெட்டில் இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. மேற்கண்ட பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமானவை கிடையாது. மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. இருப்பினும், வரும் நாட்களில் இந்த பீச்சர்கள் உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்த போனுடன் வெளியாக இருக்கும் ஐக்யூ பேட் 5 மாடலில் 12.1 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இதில் 2.8K ரெசொலூஷன் வருகிறது. மேலும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9300பிளஸ் (Octa Core Dimensity 9300+) சிப்செட் வருகிறது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது.
ஐக்யூ பேட் 5 ப்ரோ மாடலில் 3.1K ரெசொலூஷன் கொண்ட 13 இன்ச் எல்சிடி டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400பிளஸ் (Dimensity 9400+) சிப்செட் மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. இந்த டேப்லெட்களின் பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. இந்த மாடல்கள் இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளது.
இதற்கு முன்னதாக வெளியான ஐக்யூ நியோ10 ப்ரோ போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 3என்எம் சிப்செட் கிடைத்தது. இந்த போனின் பீச்சர்களை பார்த்தால், ப்ரோ பிளஸ் மாடலில் என்னென்ன அப்கிரேட் செய்யப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆகவே, ஐக்யூ நியோ10 ப்ரோ போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஐக்யூ போனில் 6.78 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) பிளாட் அமோலெட் டிஸ்பிளே மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. ப்ரோ பிளஸ் மாடலில் 2K ரெசொலூஷன் கிடைக்க இருக்கிறது. மேலும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ் மற்றும் 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. மேலும், எச்டிஆர்1பிளஸ் போன்ற ஓடிடி பிரியர்களுக்கான பீச்சர்களையும் கொடுக்கிறது.
இந்த போனில் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 5.0 (OriginOS 5.0) கிடைக்கிறது. முன்பே சொன்னதை போல ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 3என்எம் (Octa Core Dimensity 9400 3nm) சிப்செட் கிடைக்கிறது. இதுபோக இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (Immortalis G925 GPU) கிராபிக்ஸ் சாப்போர்ட்டை இந்த ஐக்யூ நியோ10 ப்ரோ போன் கொடுக்கிறது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்கள் கிடைக்கின்றன. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ், 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண்ட் மாடல்களும் கிடைக்கின்றன. வழக்கமான நியோ சீரிஸ்களில் கிடைப்பதை போலவே டூயர் ரியர் கேமரா கிடைக்கிறது.
ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்921 (Sony IMX921) சென்சார், விசிஎஸ் பயோனிக் (VCS Bionic) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. மேலும், 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. ப்ரோ பிளஸ் மாடலிலும் இதே கேமரா சிஸ்டம் கிடைக்கும். ஆனால், சென்சாரில் அப்கிரேட் செய்யப்படும்.
இந்த போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 6100mAh பேட்டரி மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஆகவே, ஃபாஸ்ட் சார்ஜிங் மாறவில்லை. ஆனால், ப்ரோ பிளஸ் மாடலில் பேட்டரி கேபாசிட்டி அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐக்யூ நியோ10 ப்ரோ போனின் ஆரம்ப விலை ரூ.37,360 பட்ஜெட்டில் இருந்தது. இதே பட்ஜெட்டில் ப்ரோ பிளஸ் மாடல் வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








