Home
Mobile

அடிச்சான் பாரு iQOO.. 120W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. புதிய 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஒரு வழியாக ஐக்யூ நியோ10 ப்ரோ பிளஸ் (iQOO Neo10 Pro Plus) ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஐக்யூ நியோ10 ப்ரோ பிளஸ் போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஐக்யூ நியோ10 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (iQOO Neo10 Pro Plus Specifications): 6.82-இன்ச் 2கே 8டி எல்டிபிஒ அமோலெட் (2K 8T LTPO AMOLED) டிஸ்பிளே உடன் ஐக்யூ நியோ10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு எச்டிஆர் 10 பிளஸ், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

அடிச்சான் பாரு iQOO.. 120W சார்ஜிங்.. புதிய 5ஜி போன் அறிமுகம்..

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் உடன் ஐக்யூ நியோ10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த ஐக்யூ போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

ஓர்ஜின்ஓஎஸ்5 (OriginOS 5) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு அண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட தரமான அம்சங்களுடன் இந்த புதிய ஐக்யூ நியோ10 ப்ரோ பிளஸ் போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி (MX921 VCS bionic) மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ நியோ10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

6800mAh பேட்டரியுடன் ஐக்யூ நியோ10 ப்ரோ பிளஸ் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W அல்ட்ரா ஃபாஸ்ட் பிளாஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

ஆனால் இந்த ஐக்யூ நியோ10 ப்ரோ பிளஸ் போன் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய போன் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த போனின் விலையைப் பார்க்கலாம்.

ஐக்யூ நியோ10 ப்ரோ பிளஸ் விலை

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ நியோ10 ப்ரோ பிளஸ் மாடலின் விலை 2799 yuan (இந்திய மதிப்பில் ரூ.33,215)
16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ நியோ10 ப்ரோ பிளஸ் மாடலின் விலை 3099 yuan (இந்திய மதிப்பில் ரூ.36,775)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ நியோ10 ப்ரோ பிளஸ் மாடலின் விலை 3299 yuan (இந்திய மதிப்பில் ரூ.39,150)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ நியோ10 ப்ரோ பிளஸ் மாடலின் விலை 3499 yuan (இந்திய மதிப்பில் ரூ.41,520)
16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ஐக்யூ நியோ10 ப்ரோ பிளஸ் மாடலின் விலை 3999 yuan (இந்திய மதிப்பில் ரூ.47,455)

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo10 Pro Plus launched in China: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X