ஜூலை 11 உறுதி.. 120W சார்ஜிங்.. 50MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது புதிய iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ நியோ 9எஸ் ப்ரோ பிளஸ் (iQOO Neo 9S Pro+) ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை (Launch Date) வெளியிட்டுள்ளது. இந்த புதிய போன் டூயல் ரியர் கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஐக்யூ நியோ 9எஸ் ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் தேதி மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஐக்யூ நியோ 9எஸ் ப்ரோ பிளஸ் அம்சங்கள் (iQOO Neo 9S Pro plus specifications): தரமான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 chipset) வசதியுடன் இந்த புதிய ஐக்யூ போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் Q1 கிராபிக்ஸ் சிப் கொண்டுள்ளது இந்த போன். எனவே அனைத்துவிதமான கேமிங் ஆப்ஸ்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம். மேலும் OriginOS 4.0சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஐக்யூ நியோ 9எஸ் ப்ரோ பிளஸ் போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே உடன் ஐக்யூ நியோ 9எஸ் ப்ரோ பிளஸ் அறிமுகம் செய்யப்படும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஐக்யூ நியோ 9எஸ் ப்ரோ பிளஸ் போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஐக்யூ நியோ 9எஸ் ப்ரோ பிளஸ் போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. குறிப்பாக இந்த ஐக்யூ நியோ 9எஸ் ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் இன் டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்யூ நியோ 9எஸ் ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 5500எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (120W fast charging) வசதியும் உள்ளது. எனவே சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும். இதுதவிர 5ஜி, ஜிபிஎஸ், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
எப்போது அறிமுகம்? வரும் ஜூலை 11-ம் தேதி ஐக்யூ நியோ 9எஸ் ப்ரோ பிளஸ் போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து இந்த மாதம் இறுதியில் இந்தியாவிலும் இந்த புதிய ஐக்யூ போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications








