டிசம்பரில் iQOO சம்பவம்.. எந்த போனும் வேண்டாம்.. வெயிட்டான சீரிஸ் வந்துட்டு இருக்கு!
இந்தியாவில் ஐக்யூ 12 சீரிஸ் (iQOO 12 Series) போன்கள் டிசம்பரில் வெளியாகும் வேளையில், ஐக்யூ நிறுவனம் ஒட்டுமொத்த மிட்-ரேஞ்ச் பிரியர்களையும் தட்டித் தூக்கும் வகையில் ஐக்யூ நியோ 9 சீரிஸ் (iQOO Neo 9 Series) போன்களை களமிறக்க இருக்கிறது.
ஐக்யூ நியோ 9, நியோ 9 ப்ரோ அம்சங்கள் (iQOO Neo 9, Neo 9 Pro Specification): இந்த சீரிஸ் போன்களில் 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவொரு பிளாட் டிஸ்பிளே (Flat Display) மாடலாகும். இருப்பினும், ஐக்யூ நியோ 9 ப்ரோ மாடலில் கர்வ்ட் அமோலெட் (Curved AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த 2 மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. அதோடு ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த ஓஎஸ்களோடு ஐக்யூ நியோ 9 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட் வருகிறது. அதேபோல ஐக்யூ நியோ 9 ப்ரோ மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 எஸ்ஓசி (MediaTek Dimensity 9300 SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போன்களில் சோனி ஐஎம்எக்ஸ்920 (Sony IMX920) சென்சாருடன் 50 எம்பி கேமரா வருகிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. ஐக்யூ நியோ 9 போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்டும், ப்ரோ போனில் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் ஆரம்ப விலைக்கு வரலாம்.
இந்த ஐக்யூ நியோ 9 சீரிஸ் போன்கள் லெதர் பேக் பேனல் டிசைன் கொண்டிருக்கிறது. இந்த பேனலோடு ரெட் மற்றும் வைட் என்று டூயல் கலர் இடம்பெற்ற அதிகாரப்பூர்வ போட்டோ வெளியாகி கவனம் பெற்றுள்ளது. வரும் டிசம்பர் மாதத்தில் சீனாவில் வெளியாகிறது. இந்த சீரிஸ் மாடல்களின் ஆரம்ப விலை ரூ.30,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்படலாம்.

இந்த நேரத்தில் வரும் டிசம்பர் 12ஆம் தேதி இந்தியாவில் வெளியாகும் ஐக்யூ 12 சீரிஸ் போன்களை பற்றி பார்ப்போம். இந்த போன் பக்கா பிரீமியம் அம்சங்களை கொண்டிருக்கின்றன. ஐக்யூ 12 மாடலில் 6.78 இன் பிளாட் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. ப்ரோ மாடலில் குவாட் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த 2 மாடல்களிலும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm Mobile) சிப்செட் வருகின்றன. ஆண்ட்ராய்டு 14 மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 4.0 கொண்டிருக்கின்றன. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 64 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது.

அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஐக்யூ 12 ப்ரோ மாடலில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5100mAh பேட்டரி வருகிறது. அதேபோல 12 மாடலில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. அதோடு 50W வயர்லெஸ் சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. 12 மாடலின் ஆரம்ப விலை ரூ.45,000 பட்ஜெட்டிலும், ப்ரோ மாடலின் ஆரம்ப விலை ரூ.58,000 பட்ஜெட்டிலும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications