அதிர விட்டாங்க.. வெறும் ரூ.27,770 போதும்.. 12GB ரேம்.. 120W சார்ஜிங்.. OIS கேமரா.. எந்த மாடல்?
ஐக்யூ பிரியர்கள் மரண வெயிட்டிங் மோடில் காத்திருக்கும்படியான பட்ஜெட்டில் 12ஜிபி ரேம், 120W சார்ஜிங், ஓஐஎஸ் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு போன்ற பக்கா அம்சங்களுடன் ஐக்யூ நியோ 9 (iQOO Neo 9) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐக்யூ நியோ 9 அம்சங்கள் (iQOO Neo 9 Specifications): இந்த ஐக்யூ போனில் 6.78 இன்ச் (2800×1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதோடு 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஓர்ஜின்ஓஎஸ் 4.0 (OriginOS 4.0) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 2 4nm Mobile) சிப்செட் வருகிறது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டிருக்கிறது. அதோடு அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ஐக்யூ போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வருகிறது.
அதேபோல 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு வர இருக்கிறது. மைக்ரோஎஸ்டி சப்போர்ட் கொடுக்கப்படவில்லை. ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் மட்டும் இடம் பெற்றுள்ளது. இந்த போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) வருகிறது.

ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்920 (Sony IMX920) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் இமேஜ் நாய்ஸ் கன்ட்ரோல், கலர் ரீஸ்டோர் போன்றவற்றுக்காக விசிஎஸ் பயோனிக் (VCS Bionic) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதோடு ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது. அதேபோல டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
இந்த ஐக்யூ நியோ 9 போனில் 120W அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5160mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 5ஜி, டூயல் 4ஜி, வை-பை 802, கியூஇசட்எஸ்எஸ் (QZSS), ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், கலிலியோ, நாவிக்ஐசி மற்றும் என்எப்சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது.
லெதர் பேக் பேனல் டிசைனில் ரெட் (RED) கலரிலும் கிளாஸ் பேக் பேனல் டிசைனில் ப்ளூ (Blue) மற்றும் பிளாக் (Black) கலரிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனின் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.27,770ஆகவும், 16 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.29,140ஆகவும் இருக்கிறது.
அதேபோல, 16 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.32,635ஆகவும், 16 ஜிபி + 1 டிபி வேரியண்ட்டின் விலை ரூ.37,300ஆக இருக்கிறது. இந்த போன் சீனாவில் அறிமுகமாகி ப்ரீ-ஆர்டருக்கு வந்துள்ளது. வரும் டிசம்பர் 30ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்தியாவில் ஜனவரி மாதம் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications








