இந்திய மார்கெட்டே அதிரும்.. 50எம்பி கேமரா.. 6.78-இன்ச் டிஸ்பிளே.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனம் தனது ஐக்யூ நியோ 9 ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் டூயல் கேமரா, பெரிய டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் ஆன்லைனல் கசிந்த இந்த ஐக்யூ நியோ 9 போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது ஐக்யூ நியோ 9 ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் 1.5K டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ நியோ 9 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஃபன்டச்ஒஸ் 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த ஐக்யூ நியோ 9 வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 920 சென்சார் வசதியும் உள்ளது. பின்பு 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் இந்த ஐக்யூ நியோ 9 போன் அறிமுகமாகும். தற்போது ஐக்யூ நியோ 9 போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்த ஐக்யூ நியோ 12 போனின் அம்சங்களைப் பார்ப்போம். ஐக்யூ நியோ 12 ஸ்மாார்ட்போன் ஆனது 6.78-இன்ச் 1.5கே பிளாட் அமோலெட் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2800 × 1260 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2,160Hz PWM dimming) உள்ளிட்ட பலவேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் சிப்செட் உடன் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது ஐக்யூ நியோ 12 போன். இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5000 எம்ஏஎச் பேட்டரி, 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், 10 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
ஐக்யூ நியோ 12 போனில் 50எம்பி மெயின் கேமரா (Omnivision OV50H sensor) + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா (Samsung JN1 sensor) + 64எம்பி 3எக்ஸ் டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதுதவிர 100x டிஜிட்டல் ஜூம், ஏ3 இமேஜிங் சிப் உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் ரியர் கேமரா.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ நியோ 12 போன்.
குறிப்பாக ஐக்யூ நியோ 12 போனின் ஆரம்ப விலை 3999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.45,715) ஆக உள்ளது. மேலும் ஐக்யூ நியோ 12 ஸ்மார்ட்போன் ஆனது வரும் டிசம்பர் மாதம் துவக்கத்தில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








