அடிதூள்.. இதுதான் புதிய iQOO போன்.. 120W சார்ஜிங்.. 256GB மெமரி.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனம் இந்த மாதம் ஐக்யூ நியோ 9 சீரிஸ் (iQOO Neo 9 series) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் நாட்களில் ஐக்யூ நியோ 9 மற்றும் ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு இந்தியா மற்றும் உலக நாடுகளில் இந்த அசத்தலான போன்கள் வெளிவரும்
இந்நிலையில் ஐக்யூ நியோ 9 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. குறிப்பாக டூயல் கேமரா வசதியுடன் இந்த அசத்தலான ஐக்யூ நியோ 9 போன் வெளிவரும். மேலும் மற்ற போன்களை விட சற்று வித்தியாசமான வடிவமைப்புடன் இந்த ஐக்யூ நியோ 9 போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இப்போது ஆன்லைனில் வெளியான ஐக்யூ நியோ 9 (iQOO Neo 9) போனின் அம்சங்களைப் பார்ப்போம். ஐக்யூ நியோ 9 ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் 1.5K ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும். பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ நியோ 9 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஃபன்டச்ஒஸ் 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த ஐக்யூ நியோ 9 வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 866 சென்சார் + அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது ஐக்யூ நியோ 9 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்ற 16எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும்.
இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. பின்பு 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் இந்த ஐக்யூ நியோ 9 போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஐக்யூ நியோ 9 போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
5000எம்ஏச் பேட்டரியுடன் இந்த ஐக்யூ நியோ 9 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கேமிங் பிரியர்களுக்காகவே பேட்டரி ஹீட்டை தவிர்க்க கூலிங் டெக்னாலஜி ஆதரவுடன் இந்த ஐக்யூ நியோ 9 போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ நியோ 9 போன்.
குறிப்பாக ஐக்யூ நியோ 9 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.35,000-க்கு கீழ் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக தரமான அம்சங்களுடன் இந்த ஐக்யூ நியோ 9 போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








