Home
Mobile

ஆர்டர் அடிச்சு பிரிக்கும்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 120W சார்ஜிங்.. 5160mAh பேட்டரி.. எந்த மாடல்?

மார்கெட் அதிரும் பட்ஜெட்டில் 120W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங், 16 ஜிபி ரேம், சோனி கேமரா, அமோலெட் டிஸ்பிளே போன்ற ப்ரீமியம் அம்சங்களுடன் விற்பனைக்கு வந்த ஐக்யூ நியோ 9 (iQOO Neo 9) மாடலே இந்தியாவில் ப்ரோ மாடலாக வெளியாகிறது.

ஐக்யூ நியோ 9, நியோ 9 ப்ரோ அம்சங்கள் (iQOO Neo 9, Neo 9 Pro Specification): இந்த போன்களில் 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10 பிளஸ், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் சப்போர்ட் உள்ளது.

பட்ஜெட்ல SONY கேமரா.. 120W சார்ஜிங்.. 5160mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஐக்யூ நியோ 9 போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 4என்எம் சிப்செட் மற்றும் அட்ரினோ 730 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஆனால், ஐக்யூ நியோ 9 ப்ரோ போனில் ஆக்டா கோர் டைமன்சிட்டி 9300 4என்எம் சிப்செட் மற்றும் இம்மார்டலிஸ் ஜி720 கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இரண்டு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 4.0 சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நியோ போனில் சோனி ஐஎம்எக்ஸ்920 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. இருப்பினும், நியோ ப்ரோ போனில் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.

16 செல்பீ கேமரா ஒரே மாதிரியாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 2 போன்களிலும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வருகின்றன.

பட்ஜெட்ல SONY கேமரா.. 120W சார்ஜிங்.. 5160mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்த ஐக்யூ போன்களில் 120W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5160mAh பேட்டரி வருகிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொண்டுள்ளது.

இந்த போன்களில் ரெட்/வைட் சோல் (Red/White Soul) கலர் கொண்ட லெதர் வெர்ஷன் மற்றும் நாட்டிகல் ப்ளூ (Nautical Blue), ஃபைட்டிங் பிளாக் (Fighting Black) கலர்கள் கொண்ட கிளாஸ் வெர்ஷன் வருகிறது. இந்த நியோ 9 போனின் இந்த போனின் 12ஜிபி+256ஜிபி மாடலின் விலை ரூ.27,770ஆகவும், 16ஜிபி+256ஜிபி மாடலின் விலை ரூ.29,140ஆகவும், 16ஜிபி+512ஜிபி மாடலின் விலை ரூ.32,635ஆகவும், 16ஜிபி+1டிபி மாடலின் விலை ரூ.37,300ஆக இருக்கிறது.

அதேபோல நியோ 9 ப்ரோ போனின் 12ஜிபி+256ஜிபி மாடலின் விலை ரூ.36,211ஆகவும், 12ஜிபி+512ஜிபி மாடலின் விலை ரூ.39,833ஆகவும், 16ஜிபி+512ஜிபி மாடலின் விலை ரூ.43,444ஆகவும், 16ஜிபி+1டிபி மாடலின் விலை ரூ.48,285ஆகவும் இருக்கிறது. இதே விலையில் சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

பட்ஜெட்ல SONY கேமரா.. 120W சார்ஜிங்.. 5160mAh பேட்டரி.. எந்த மாடல்?

இப்போது, சர்வதேச மார்கெட் மற்றும் இந்திய வெளியீடு தொடர்பான தகவல்கள் வெளியாகிவருகின்றன. ஜனவரியில் இந்தியாவில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சீனாவில் வெளியான ஐக்யூ நியோ 9 மாடலே, இந்தியாவில் ஐக்யூ நியோ 9 ப்ரோ மாடலாக வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஆகவே, ஆக்டா கோர் டைமன்சிட்டி 9300 4என்எம் சிப்செட்டுக்கு பதிலாக ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 4என்எம் சிப்செட் வரும் என்று தெரிகிறது. இருப்பினும், சீன மார்கெட் விலையைவிட சற்று கம்மியான விலைக்கு இங்கு விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. கேமரா, பேட்டரி, ரேம் அம்சங்களில் பின்னிப்பெடல் எடுப்பதால் நல்ல வரவேற்பு பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo 9 Pro With Snapdragon 8 Gen 2 Tipped to Launch on January in India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X