Home
Mobile

தலைவன் வேற மாறி.. ரூ.26,800 பட்ஜெட்ல SONY கேமரா.. OLED டிஸ்பிளே.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?

இப்போ வரும், அப்போ வரும் என்று ஐக்யூ பிரியர்களை அறக்க பறக்க செய்த ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) போனின் இந்திய வெளியீடு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சோனி கேமரா, ஓஎல்இடி டிஸ்பிளே என்று பின்னியெடுக்கிறது.

ஐக்யூ நியோ 9 ப்ரோ அம்சங்கள் (iQOO Neo 9 Pro Specifications): இந்த நியோ வேரியண்ட்டில் 6.78 இன்ச் (2800×1260 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 1.5K ரெசொலூஷன் கொண்ட எல்டிபிஓ (LTPO) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் வருகிறது.

ரூ.26,800 பட்ஜெட்ல SONY கேமரா.. OLED டிஸ்பிளே.. 120W சார்ஜிங் போன்!

அதேபோல 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, விஷன்ஓஎக்ஸ் விஎம்7 (Visionox VM7), விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கேமிங் அனுபவத்தை மேம்படுத்த ஐக்யூ கியூ1 சிப் (iQOO Q1) பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே அனுபவத்தை எதிர்பார்க்கலாம்.

இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS), ஓர்ஜின்ஓஎஸ் 4.0 (OriginOS 4.0) மற்றும் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் வருகிறது.

இந்த ஐக்யூ வேரியண்ட்டில், சோனி ஐஎம்எக்ஸ்920 (Sony IMX920) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. அதோடு சாம்சங் (Samsung) சென்சார் கொண்ட 16 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமரா மாடலாகும்.

ரூ.26,800 பட்ஜெட்ல SONY கேமரா.. OLED டிஸ்பிளே.. 120W சார்ஜிங் போன்!

இந்த கேமராவை போலவே பேட்டரியும் பக்காவாகவே வருகிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5160mAh கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வர இருக்கிறது.

அதேபோல 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் கிடைக்க இருக்கிறது. இந்த போன் கேமிங் வேரியண்ட் என்பதால், எக்ஸ்-ஆக்சிஸ் லினியர் மோட்டார் (X-axis Linear Motor) வருகிறது. அதேபோல ரிமோட் கன்ட்ரோலுக்காக ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) கொண்டுள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) கொண்டிருக்கிறது. இந்த போனில் லெதர் பேக் பேனல் கொண்ட ரெட்/வைட் சோல் (Red/White Soul) கலர் வெளியாக இருக்கிறது. அதேபோல நாட்டிகல் ப்ளூ (Nautical Blue) மற்றும் ஃபைட்டிங் பிளாக் (Fighting Black) ஆகிய கலர்களும் இருக்கின்றன.

IP54 தர ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது. வை-பை 7, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த போனின் 12 ஜிபி ரேம் +256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,800 ஆக நிர்ணயம் செய்யப்படும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த போன் ஜனவரியில் வெளியாகும் என்று கூறப்பட்டது.

ஆனால், இப்போது ஐக்யூ இந்தியா (iQOO India) நிறுவனமே, இந்த போன் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளது. ஆனால், தேதியை குறிப்பிடவில்லை. இருப்பினும், முதல் வாரத்தில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. வெறும் ரூ.26,000 பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், சோனி கேமரா, 120W சார்ஜிங் கிடைப்பதால், நல்ல வரவேற்பு பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo 9 Pro With Snapdragon 8 Gen 2 Chip Launch in India on February Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X