அதிர போகுது.. OIS கேமரா.. OLED டிஸ்பிளே.. 120W சார்ஜிங்.. 5160mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்தியாவில் ஐக்யூ 12 சீரிஸ் மாடல்கள் பெற்ற பிரம்மாண்ட வரவேற்பு பிறகு ஐக்யூ நியோ 9 சீரிஸ் (iQOO Neo 9 Series) மாடல்கள் மீது ஒட்டுமொத்த கவனமும் சென்றுள்ளது. இந்த மாடல்கள் வரும் டிசம்பர் 27ஆம் தேதி சீனாவில் வெளியாகின்றன.
இப்போது, அந்த போன்களின் இந்திய வெளியீட்டு விவரம் மட்டுமல்லாமல், சிப்செட் அம்சமும் கசிந்து, ஸ்மார்ட்போன் மார்கெட்டை அதிர வைத்துள்ளது. இவ்வளவு பில்ட்-அப் கொடுக்கும் அளவுக்கு ஐக்யூ நியோ 9 சீரிஸ் போன்களில் அப்படி என்ன அம்சங்கள் இருக்கின்றன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

ஐக்யூ நியோ 9, நியோ 9 ப்ரோ அம்சங்கள் (iQOO Neo 9, Neo 9 Pro Specification): இந்த போன்களில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 1.5K ரெசொலூஷன் கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10பிளஸ் சப்போர்ட் உள்ளது.
இந்த போன்களின் போட்டோக்கள் வெளியானதில் பிளாட் டிஸ்பிளே (Flat Display) வருவது உறுதியாகிவிட்டது. இந்த டிஸ்பிளேவில் எல்டிபிஓ (LTPO) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐக்யூ நியோ 9 போனில் குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 மொபைல் (Qualcomm Snapdragon 8 Gen 2 Mobile) சிப்செட் வருகிறது.
அதேபோல, ஐக்யூ நியோ 9 ப்ரோ போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 (MediaTek Dimensity 9300) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் வெளியாகும் ஐக்யூ நியோ 9 ப்ரோ போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டே கொடுக்கப்படும் என்று மார்கெட் வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது.

இந்த சிப்செட் போக ஐக்யூ ஈ-ஸ்போர்ட்ஸ் சிப் கியூ1 (iQOO E-sports Chip Q1) என்னும் பிரத்யேக கேமிங் ப்ராசஸர் வருகிறது. இந்த ப்ராசஸர் அல்ட்ரா எச்டி கேமிங் அனுபவத்தை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 14 (Origin OS 14) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஐக்யூ நியோ 9 சீரிஸ் போன்களின் கேமராவும் மிரள வைக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், ஐக்யூ நியோ 9 மாடலில் 50 எம்பி மெயின் கேமராவானது, சோனி ஐஎம்எக்ஸ்920 (Sony IMX920) சென்சாருடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.
அதேபோல நியோ 9 ப்ரோ போனில் சோனி ஐஎம்எக்ஸ்920 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இருப்பினும், இந்த ப்ரோ போனில் 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவானது, சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சாருடன் வருகிறது. 2 போன்களும் டூயல் கேமரா சிஸ்டம் மட்டுமே கொண்டுள்ளன.

16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. கேமராவை போலவே பேட்டரியும் பக்கா பிரீமியமாக கொடுக்கப்பட்டுள்ளது. 120W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5160mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் வருகிறது. இன்டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொண்டுள்ளது.
இந்த போன்களில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி என்று 4 வேரியண்ட்கள் வெளியாகின்றன. சீன வெளியீட்டுக்கு பிறகு ஜனவரியில் இந்தியாவில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








