மார்கெட் அதகளம்.. SONY கேமரா.. 24GB ரேம்.. 120W சார்ஜிங்.. 2 சிப்செட்.. எந்த மாடல்?
கேமிங் பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ஐக்யூ நியோ 9 சீரிஸ் (iQOO Neo 9 Series) மாடல்களின் அதிகாரப்பூர்வ அம்சங்கள் வெளியாகி மார்கெட் வட்டாரங்களை மிரள வைத்துள்ளது. ஐக்யூ நிறுவனமே முக்கியமான அம்சங்களை உறுதி செய்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
ஐக்யூ நியோ 9 மாடலில் குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 மொபைல் (Qualcomm Snapdragon 8 Gen 2 Mobile) சிப்செட் மற்றும் நியோ 9 ப்ரோ மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 (MediaTek Dimensity 9300) சிப்செட் வருகிறது. கேமிங் பிரியர்களுக்காக ஐக்யூ கியூ1 (iQOO Q1) சிப் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, 2 சிப் கொண்டிருக்கிறது. அதேபோல 6K விசி லிக்விட்-கூல்டு 3டி ஹீட் டிஸ்சிபேஷன் (VC Liquid Cooled 3D Heat Dissipation) சிஸ்டம் வருகிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. 5,160mAh பேட்டரி வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்920 சென்சார் கொண்ட 50 எம்பி பிரைமரி கேமரா வருகிறது.
8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. 7.99 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. இந்த ஐக்யூ நியோ 9 சீரிஸ் மாடல்களில் ரெட் அண்ட் ஒயிட் சோல் (Red and White Soul), நாட்டிகல் ப்ளூ (Nautical Blue), ஃபைட்டிங் பிளாக் (Fighting Black) ஆகிய 3 கலர்கள் வருகிறது. இப்போது, மார்கெட் வட்டாரங்களில் ஏற்கனவே கசிந்த அம்சங்களை பற்றி பார்ப்போம்.

ஐக்யூ நியோ 9, நியோ 9 ப்ரோ அம்சங்கள் (iQOO Neo 9, Neo 9 Pro Specification): இந்த 2 மாடல்களிலும் 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 1.5K ரெசொலூஷன் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 14 (Origin OS 4) வருகிறது. ஐக்யூ நியோ 9 போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது.
ஐக்யூ நியோ 9 ப்ரோ மாடலில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வருகிறது. கியூ 1 சிப் வருவதால், அதற்கேற்ப ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster), ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் எக்ஸ்-ஆக்சிஸ் லினியர் மோட்டார் (X-axis Linear Motor) சப்போர்ட் வருகிறது.
இன்டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் வரும் டிசம்பர் 27ஆம் தேதி சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. அதன்பின் அடுத்த நாடுகளில் வெளியாக இருக்கிறது. இந்தியாவில் ஜனவரி மாதத்தில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் ஐக்யூ நியோ 9 சீரிஸ் மாடல்களின் ஆரம்ப விலை ரூ.30,000 முதல் ரூ.40,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த போன் கேமிங் பிரியர்களுக்கான சிப்செட் மற்றும் பேட்டரி செட்டப் கொண்டிருப்பதால், ஐக்யூ 12 சீரிஸ் போன்களைவிட அதிக வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








