Home
Mobile

யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல SONY கேமரா.. OLED டிஸ்பிளே.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும், கேமிங் பிரியர்களையும் அறக்க பறக்க செய்யும்படி ஐக்யூ நியோ 9 சீரிஸ் (iQOO Neo 9 Series) போன்களின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு டிசைன், கலர் மற்றும் முழு அம்சங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

ஐக்யூ நியோ 9, நியோ 9 ப்ரோ அம்சங்கள் (iQOO Neo 9, Neo 9 Pro Specification): இந்த ஐக்யூ நியோ 9 போனில் குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 மொபைல் (Qualcomm Snapdragon 8 Gen 2 Mobile) சிப்செட் வருகிறது. ஆனால், ஐக்யூ நியோ 9 ப்ரோ போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 (MediaTek Dimensity 9300) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்ல SONY கேமரா.. OLED டிஸ்பிளே.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?

அதேபோல ஐக்யூ நியோ 9 போனில் சோனி ஐஎம்எக்ஸ்920 (Sony IMX920) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. ஆனால், ஐக்யூ நியோ 9 ப்ரோ மாடலில் சோனி ஐஎம்எக்ஸ்920 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுளது.

அதோடு சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. இரண்டு போன்களும் 16 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கின்றன. இந்த சிப்செட் மற்றும் கேமரா அம்சங்களில் மட்டுமே வேறுபாடு இருக்கிறது. மற்ற அம்சங்கள் ஒரே மாதிரியாகவே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆகவே, 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன்கள் பிளாட் டிஸ்பிளே (Flat Display) கொண்டிருக்கின்றன. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.

பட்ஜெட்ல SONY கேமரா.. OLED டிஸ்பிளே.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?

அதோடு ஓர்ஜின்ஓஎஸ் 14 (Origin OS 4) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஐக்யூ நியோ 9 சீரிஸ் மாடல்களில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட 4 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன.

இந்த போன்களில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,160mAh பேட்டரி வருகிறது. மேலும், கேமிங் பிரியர்களுக்காக பிரத்யேகமாக ஐக்யூ கியூ1 (iQOO Q1) சிப் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster), டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers), எக்ஸ்-ஆக்சிஸ் லினியர் மோட்டார் (X-axis Linear Motor) போன்ற அம்சங்கள் கொண்டிருக்கின்றன.

இன்டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor வருகிறது. இந்த ஐக்யூ நியோ 9 சீரிஸ் போன்களின் டிசைன் மற்றும் கலர் வேரியண்ட்களோடு வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, பிளாக், ப்ளூ மற்றும் டூயல்-டோன் ரெட் ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

பட்ஜெட்ல SONY கேமரா.. OLED டிஸ்பிளே.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?

வரும் டிசம்பர் 27ஆம் தேதி சீனாவில் வெளியாகிறது. இவற்றின் ஆரம்பர விலை ரூ.30,000 பட்ஜெட்டில் இருக்கும். இந்த வெளியீட்டுக்கு பிறகு இந்தியா உள்பட மற்ற நாடுகளில் எதிர்பார்க்கலாம். ஜனவரியில் இந்தியாவில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. முன்னதாக ஐக்யூ 12 சீரிஸ் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo 9 Pro With Dimensity 9300, 16GB RAM Launch on December 27 in China Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X