Home
Mobile

தலைவன் வேற ரகம்.. பட்ஜெட்ல OLED டிஸ்பிளே.. 120W சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரெட்-ஒயிட் கொண்ட டூயல் கலர் வேரியண்ட் மட்டுமல்லாமல், கான்கியூரார் பிளாக் என்னும் மற்றொரு பிரீமியம் கலரில் ஐக்யூ நியோ 9 ப்ரோ போன் வெளியாக இருக்கிறது. இதன் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ.

இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) வரும் பிப்ரவரி 22ஆம் தேதி இந்தியாவில் வெளியாக இருக்கிறது. இதனால், அந்த போனின் விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகி மார்கெட்டை அதிர வைத்து வருகிறது. இப்போது, அல்ட்ரா பிரீமியம் டிசைன் கொண்ட பிளாக் கலர் வேரியண்ட் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட்ல OLED டிஸ்பிளே.. 120W சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?

இந்த ஐக்யூ போன் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனுக்கான எதிர்பார்ப்பு மிகப்பெரும் அளவில் இருப்பதற்கு காரணம், அதன் விலை, கேமரா மற்றும் பேட்டரி அம்சங்கள் மட்டுமேயாகும். இந்த போன் சீனாவில் வெளியாகிவிட்டது. அந்த அம்சங்களை முதலில் பார்ப்போம்.

ஐக்யூ நியோ 9 ப்ரோ அம்சங்கள் (iQOO Neo 9 Pro Specifications): இந்த போனில் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (2800×1260 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் வருகிறது.

அதுமட்டுமல்லாமல், விஷன்ஓஎக்ஸ் விஎம்7 (Visionox VM7) மற்றும் விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) போன்ற டிஸ்பிளே டெக்னாலஜிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் வருகிறது.

அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. இந்த மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்920 (Sony IMX920) சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்டிருக்கிறது.

பட்ஜெட்ல OLED டிஸ்பிளே.. 120W சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?

இந்த ஐக்யூ போனில் 5160mAh பேட்டரி வருகிறது. அதற்கு 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஐக்யூ கியூ1 (iQOO Q1) கேமிங் சிப் வருகிறது. அதோடு எக்ஸ்-ஆக்சிஸ் லினியர் மோட்டார் மற்றும் ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) கொண்டிருக்கிறது.

மேலும், IP54 தர ரெசிஸ்டன்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) கொண்டிருக்கிறது. இதே அம்சங்களுடன் இந்தியாவில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இந்த போனின் விலையும் ஏற்கனவே கசிந்துள்ளது.

இந்த போனின் 12 ஜிபி ரேம் +256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.30,000 முதல் ரூ.35,000 பட்ஜெட்டில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், சீனாவிலும் இதே விலை நிர்ணயம் இருக்கிறது. அதைவிட சிறிது கம்மியான விலையிலேயே இங்கு வெளியாக அதிக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo 9 Pro With Conqueror Black Edition To Launch on February 22 in India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X