மிரளவிடும் பட்ஜெட்.. SONY கேமரா.. 120W சார்ஜிங்.. 12GB ரேம்.. IR பிளாஸ்டர்.. எந்த மாடல்?
ஐக்யூ (iQOO) பிரியர்கள் அறக்க பறக்கும் விதமாக பிப்ரவரி 22ஆம் தேதி அறிமுகமாக இருக்கும் ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) போனின் டிஸ்பிளே அம்சங்கள் வெளியாகி மார்கெட்டை அதிர வைத்துள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ.
இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ போனின் அறிமுகம் நெருங்கி வருவதால், கேமரா, பேட்டரி, கலர் ஆப்ஷன், சிப்செட் போன்ற அம்சங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இப்போது, டிஸ்பிளே அம்சங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த அம்சங்களையும், ஏற்கனவே வெளியான அம்சங்களையும் இப்போது பார்ப்போம்.
இந்த ஐக்யூ போனில் 6.7 இன்ச் 6.78 இன்ச் (2800×1260 பிக்சல்கள்) பிளாட் அமோலெட் (Flat AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதுமட்டும்லாமல், 1.5K ரெசொலூஷன் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொண்டுள்ளது.
ஐக்யூ நியோ 9 ப்ரோ அம்சங்கள் (iQOO Neo 9 Pro Specifications): இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ போனில் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இதில் சோனி ஐஎம்எக்ஸ்920 (Sony IMX920) சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் கேமரா வருகிறது.

இதுவொரு நைட் விஷன் (Night Vision) கேமராவாகும். அதோடு ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5160mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Octa Core Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் வருகிறது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டுள்ளது. சிப்செட்டுக்கு அடுத்தப்படியாக கேமிங்குக்காக ஐக்யூ கியூ1 (iQOO Q1) என்னும் மற்றொரு சிப் வருகிறது. இந்த ஐக்யூ போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.
அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு செய்யப்பட இருக்கிறது. இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ போனில் ஃபீரி ரெட் (Fiery Red) மற்றும் கான்கியூரர் பிளாக் (Conqueror Black) ஆகிய 2 கலர்கள் இருக்கின்றன. மேற்கூறிய அம்சங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த போனானது, சீனாவில் முன்னதாகவே வெளியாகிவிட்டதால், அதன் மற்ற அம்சங்கள் இந்த போனில் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதை இப்போது தெரிந்து கொள்வோம். இந்த போனின் டிஸ்பிளேவில் விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) வருகிறது.
அதோடு விஷன்ஓஎக்ஸ் விஎம்7 (Visionox VM7) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு மட்டுமல்லாமல், எக்ஸ்-ஆக்சிஸ் லினியர் மோட்டார் மற்றும் ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) வருகிறது. IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது.
அதேபோல ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ போனின் விலை ரூ.30,000 முதல் ரூ.35,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








