Home
Mobile

மார்கெட் மிரளுது.. பட்ஜெட்ல SONY கேமரா.. 12GB ரேம்.. 120W சார்ஜிங்.. 5160mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களையும் தட்டித்தூக்கும் விதமாக சோனி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 12ஜிபி ரேம், 120W சார்ஜிங், 5160mAh பேட்டரி போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களுடன் ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) போன் வெளியாக இருக்கிறது.

இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ போனானாது, வரும் பிப்ரவரி 22ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இதனால், அந்த போனின் அம்சங்கள் அடுத்தடுத்து வெளியாகி மார்கெட்டை மிரளவிட்டு வருகிறது. இப்போது, கேமரா மற்றும் பேட்டரி அம்சங்கள் வெளியாகி அதன் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

 SONY கேமரா.. 12GB ரேம்.. 120W சார்ஜிங்.. 5160mAh பேட்டரி.. எந்த போன்?

இந்த ஐக்யூ போனில் சோனி ஐஎம்எக்ஸ்920 (Sony IMX920) சென்சார் கொண்ட 50 எம்பி நைட் விஷன் மெயின் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த கேமராவை போலவே பேட்டரி சிஸ்டமும் பிரீமியமாகவே கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5160mAh பேட்டரி வருகிறது. அதுமட்டுமல்லாமல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் கொண்டுள்ளது.

பிரீமியம் கேமிங் பிரியர்களுக்காக ஐக்யூ கியூ1 (iQOO Q1) என்றும் பிரத்யேக கேமிங் சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.

இந்த போனில் டூயல் டோன் கொண்ட ஃபீரி ரெட் (Fiery Red) மற்றும் கான்கியூரர் பிளாக் (Conqueror Black) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த டூயல் டோன் கலர் வேரியண்ட்டானது, பிரீமியம் லெதர் பேக் பேனல் கொண்டிருக்கிறது. இந்த அம்சங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ போனானது, ஏற்கனவே சீனாவில் வெளியாகிவிட்டது. ஆகவே, இந்திய வேரியண்ட்டின் மற்ற அம்சங்களும் அதைப்போலவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, சீனாவில் வெளியாகிய அந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

ஐக்யூ நியோ 9 ப்ரோ அம்சங்கள் (iQOO Neo 9 Pro Specifications): இந்த போனில் 6.78 இன்ச் (2800×1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொண்டுள்ளது.

 SONY கேமரா.. 12GB ரேம்.. 120W சார்ஜிங்.. 5160mAh பேட்டரி.. எந்த போன்?

விஷன்ஓஎக்ஸ் விஎம்7 (Visionox VM7) டெக்னாலஜி வருகிறது. அதுமட்டுமல்லாமல், விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) பயன்படுத்தப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டிருக்கிது. அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது

கேமிங் பிரியர்களுக்கான எக்ஸ்-ஆக்சிஸ் லினியர் மோட்டார் மற்றும் ஐஆர் பிளாஸ்டர் சப்போர்ட் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) வருகிறது. IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த போனின் ஆரம்ப விலை ரூ.30,000 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆகவே, இதே விலை இங்கும் இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo 9 Pro With 50MP Camera, 5160mAh Battery Launch February 22 in India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X