Home
Mobile

அதிரவிடும் பட்ஜெட்.. 128GB மெமரி.. சோனி கேமரா.. 120W சார்ஜிங்.. மார்ச் 21-ல் புது மாடல்.. எந்த போன்?

ஐக்யூ நிறுவனம் ஐக்யூ நியோ 9 ப்ரோ போனின் புதிய வேரியண்ட் ஆனது வரும் மார்ச் 21-ம் தேதி விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் புதிய வேரியண்ட் விலை மற்றும் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஐக்யூ நியோ 9 ப்ரோ போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் தான் ரூ.35,999 விலையில் மார்ச் 21-ம் தேதி விற்பனைக்கு வர உள்ளது. இந்த போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரூ.37,999 விலையிலும் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.39,999 விலையில் ஏற்கனவே விற்பனைக்கு வந்துள்ளது.

அதிரவிடும் பட்ஜெட்.. 128GB மெமரி.. மார்ச் 21-ல் புது மாடல்.. எந்த போன்

அதேபோல் ஐக்யூ நியோ 9 ப்ரோ போனின் புதிய வேரியண்ட்-ஐ அமேசான் தளத்தில் வாங்கமுடியும். குறிப்பாக இந்த தளத்தில் தேர்வு செய்யப்படட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் கிடைக்கும். மேலும் இந்த போனின்புதிய வேரியண்ட் ஃபியரி ரெட் மற்றும் பிளாக் நிறங்களில் வாங்கலாம்.

ஐக்யூ நியோ 9 ப்ரோ அம்சங்கள் (iQOO Neo 9 Pro specifications): 6.78-இன்ச் 1.5கே அமோலெட் டிஸ்பிளே (1.5K AMOLED display) வசதியுடன் ஐக்யூ நியோ 9 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

ஃபன்டச் ஓஎஸ் 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 2) வசதி இந்த போனில் உள்ளது.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்920 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

அதிரவிடும் பட்ஜெட்.. 128GB மெமரி.. மார்ச் 21-ல் புது மாடல்.. எந்த போன்

5160எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேடிங்கையும் (IP54 Rating) பெற்றுள்ளது இந்த அட்டகாசமான ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை 7 உள்ளிட்ட பல்வேறு சிறப்ப அம்சங்கள் இந்த புதிய ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo 9 Pro with 128GB storage goes sale on March 21: check Price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X