மார்க்கெட்டே அதிர போகுது.. 120W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 512ஜிபி மெமரி.. எந்த போன்?
விவோ நிறுவனத்தின் துணை நிறுவனமான ஐக்யூ பிராண்டு விரைவில் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்நிறுவனம் ஐக்யூ நியோ 9 ப்ரோ எனும் ஸ்மார்ட்போனை வரும் பிப்ரவரி 22-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஐக்யூ நியோ 9 ப்ரோ அம்சங்கள் (iQOO Neo 9 Pro specifications ): 6.78-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே (OLED display) உடன் இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Snapdragon 8 Gen 2 chipset)வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
ஃபன்டச் ஒஸ் 14 (FunTouch OS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம்.
ஒஐஎஸ் ஆதரவு கொண்ட 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்920 (Sony IMX920) மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் (ultra wide lens) என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் அண்டர்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டூயல் ஸ்பீக்கர்கள் (dual speakers), ஐஆர் பிளாஸ்டர் (IR blaster), வசதியைக் கொண்டு இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
12ஜிபி வரை LPDDR5x ரேம் மற்றும் 512 ஜிபி வரை மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

5160எம்ஏஎச் பேட்டரி (5160mAh battery) வசதி உடன் இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி (120W fast charging) உள்ளது. பின்பு 5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.40,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த போன்..


Click it and Unblock the Notifications








