இன்னையோட.. ரூ.30,000 மார்க்கெட் காலி.. ரூ.3000 ஆஃபருடன்.. ஆர்டர் வாங்க ஆரம்பித்த புது iQOO போன்!
ஒன்பிளஸ் மற்றும் மோட்டோரோலா உட்பட, இந்தியாவில் வாங்க கிடைக்கும் பெரும்பாலான மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை எல்லாம் "ஓரங்கட்டும்" விலை மற்றும் அம்சங்களுடன் வரும் ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) ஸ்மார்ட்போனின் முன்பதிவு இன்று (பிப்.8) முதல் தொடங்கியது.
ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போனை ப்ரீ-புக்கிங் (Pre-Booking) செய்வது எப்படி? முன்பதிவு செய்பவர்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும்? ஐக்யூ நியோ 9 ப்ரோ சரியாக எந்த தேதியில் இந்தியாவில் (India Launch Date) அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

ஐக்யூ நியோ 9 ப்ரோவை ப்ரீ-புக்கிங் செய்வது எப்படி? பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் மதியம் 12 மணி முதல், அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் ஐக்யூவின் அதிகாரபூர்வ இணையதளம் (iQOO Website) வழியாக ஐக்யூ நியோ 9 ப்ரோவை முன்பதிவு செய்யலாம்
முன்பதிவு செய்பவர்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும்? ஐக்யூ நியோ 9 ப்ரோவை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 கூடுதல் தள்ளுபடி ( Rs.1,000 extra discount), 2 வருட வாரண்டி (, 2 years of warranty) மற்றும் பிரத்யேக வெளியீட்டு சலுகைகள் (Exclusive launch date offers) கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மிகவும் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான முகுல் ஷ்ர்மா, தனது எக்ஸ் அக்கவுண்ட் வழியாக (@stufflistings) பகிர்ந்துள்ள ஒரு தகவலின்படி, விற்பனைக்கு வரும் போது ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் மீது ரூ.3000 வரையிலான பேங்க் ஆஃபர் (Bank Offer) கிடைக்கும். கூடவே அவர் ஐக்யூ நியோ 9 ப்ரோவின் விலை விவரங்களையும் லீக் செய்துள்ளார்.
என்ன விலைக்கு வரும்? ஐக்யூ நியோ 9 ப்ரோவின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்தியாவில் ரூ.37,999-க்கு அறிமுகம் செய்யப்படலாம். ரூ.3000 பேங்க் ஆஃபரின் கீழ், இந்த ஸ்மார்ட்போனின் இறுதி விலை ரூ.34,999 ஆக குறையும். 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் விலை விவரங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. இருப்பினும் இது ரூ.40,000 க்குள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போனானது இரண்டு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் - க்ளாஸி பினிஷ் (Glossy finish) கொண்ட கான்குவரர் பிளாக் (Conqueror Black) மற்றும் டூயல்-டோன் ஃபாக்ஸ் லெதர் பேக் பேனல் (Dual-tone faux leather back panel) உடனான ஃபயரி ரெட் (Fiery Red).
ஐக்யூவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் மேம்படுத்தப்பட்ட கேமிங் அனுபவத்திற்காக சூப்பர் கம்ப்யூட்டிங் க்யூ1 சிப் (Supercomputing Q1 Chip) உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி (Snapdragon 8 Gen 2 SoC) மூலம் இயக்கப்படும் என்பதும் உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (Optical image stabilization - OIS) ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் IMX920 மெயின் சென்சார் + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா (Ultra-wide Camera) இடம்பெறும்.
மேலும் இது 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு (Wired Fast Charging Support) உடன் 5160mAh பேட்டரியை பேக் செய்யும். கடைசியாக இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) மற்றும் 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (3000nits Peak Brightness) உடனான 6.78-இன்ச் எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








