Home
Mobile

அதிர விடும் விலை.. 120W சார்ஜிங்.. Sony கேமரா.. 256GB மெமரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் தனது ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) ஸ்மார்ட்போன் ஆனது வரும் பிப்ரவரி 22-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அசத்தலான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இந்த போனின் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது டிப்ஸ்டர் முகுல் ஷர்மா இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ விலை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். இப்போது குறித்த தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதிர விடும் விலை.. 120W சார்ஜிங்.. Sony கேமரா.. எந்த மாடல்?

அதன்படி 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.37,999 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த போனுக்கு அறிமுக சலுகையாக வங்கி சலுகையுடன் சேர்த்து ரூ.3000 தள்ளுபடி கிடைக்கும் என்றும், எனவே இந்த போனை ரூ.34,999 விலையில் வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வரும்.

ஐக்யூ நியோ 9 ப்ரோ அம்சங்கள் (iQOO Neo 9 Pro specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் கொண்டுள்ளது இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ போன். மேலும் சிறந்த கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் இதில் ஐக்யூ கியூ1 (iQOO Q1) என்றும் பிரத்யேக கேமிங் சிப் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஐக்யூ நியோ 9 ப்ரோ.

ஃபன்டச் ஓஎஸ் 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் பீரி ரெட் (Fiery Red) மற்றும் கான்கியூரர் பிளாக் (Conqueror Black) நிறங்களில் இந்த போன் அறிமுகமாகும்.

6.78 இன்ச் அமோலெட் (AMOLED)) டிஸ்பிளே வசதியுடன் ஐக்யூ நியோ 9 ப்ரோ போன் வெளிவரும். மேலும் 2800×1260 பிக்சல்ஸ், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine)உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

அதிர விடும் விலை.. 120W சார்ஜிங்.. Sony கேமரா.. எந்த மாடல்?

IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது இந்த புதிய ஐக்யூ போன். மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo Speakers), ஹை-பை ஆடியோ(Hi-Fi Audio), இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு வெளிவரும் ஐக்யூ நியோ 9 ப்ரோ.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்920 (Sony IMX920) பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா லைடு லென்ஸ் (ultrawide lens) என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஐக்யூ நியோ 9 ப்ரோ. அதேபோல் 16எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ வெளிவரும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo 9 Pro India Price Revealed Ahead of Launch: check launch date, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X