Home
Mobile

கண்ண மூடிக்கிட்டு ஆர்டர் போடலாம்! கனவு விலையில் Night Vision கேமரா, 5160mAh பேட்டரி, 120W சார்ஜிங்! என்ன போன்?

பிப்ரவரி மாதம், ஆரம்பமே அட்டகாசமாக இருக்கிறதே என்று கூறும்படியாக.. க்யூ1 சூப்பர் கம்பியூடிங் சிப், ஐஓஎஸ் ஆதரவுடனான சோனி கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 5160எம்ஏஎச்.. உட்பட பல முக்கிய அம்சங்களுடன் ஒரு புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தைக்கு வருகிறது.

நாம் இங்கே பேசுவது ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) ஸ்மார்ட்போனை பற்றித்தான். பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் முன்பதிவுகளை தொடங்கவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? என்னென்ன ப்ரீ-புக்கிங் சலுகைகள் (Pre-Booking Offers) அறிவிக்கப்பட்டுள்ளது? சரியாக எந்த தேதியில் இந்தியாவில் அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

iQoo Neo 9 Pro ப்ரீ-புக்கிங்.. கண்ண மூடிக்கிட்டு வாங்கும் விலை!

ஐக்யூ நியோ 9 ப்ரோவின் உறுதிப்படுத்தப்பட்ட அம்சங்கள்: அமேசான் இந்தியா வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ள விவரங்களின்படி, ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது டூயல் டோன் டிசைன், பிரீமியம் லெதர் பினிஷ் மற்றும் தனித்துவமான "ஸ்கிர்கிள்" டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Snapdragon 8 Gen 2 SoC) உடன் வரும்.

கேமிங்கிற்காக, ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஐக்யூ நிறுவனத்தின் க்யூ1 சூப்பர் கம்ப்யூட்டிங் சிப் (Q1 Super Computing Chip) சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சிப் 144fps பிரேம் ரேட் மற்றும் 900p ரெசல்யூஷன் கொண்ட கேமிங் அனுபவத்தை வழங்கும். இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வெவ்வேறு ரேம் வகைகளில் கிடைக்கும்: 8ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி ரேம். இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை 256ஜிபி வரை இருக்கும்.

iQoo Neo 9 Pro ப்ரீ-புக்கிங்.. கண்ண மூடிக்கிட்டு வாங்கும் விலை!

கேமராக்களை பொறுத்தவரை, ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்920 மெயின் சென்சார் (50MP Sony IMX920 main sensor) இருக்கும். இது ஓஐஎஸ் (OIS - Optical Image Stabilization) மற்றும் நைட் விஷன் திறன்களையும் (Night vision capabilities) கொண்டிருக்கும். இதனுடன் 8எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவும் இருக்கும்.

கடைசியாக ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5160mAh பேட்டரியை பேக் செய்யும். இந்த ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் பிடி சார்ஜர் (PD Charger) ஆனது பிடி நெறிமுறைகளுக்கு (PD protocols) இணங்க மற்ற டிவைஸ்களையும் ஃபாஸ்ட் சார்ஜ் செய்யும். ஆனால் மற்ற டிவைஸ்களுக்கு 65W வரையிலான சார்ஜிங் ஸ்பீட் மட்டுமே கிடைக்கும்.

iQoo Neo 9 Pro ப்ரீ-புக்கிங்.. கண்ண மூடிக்கிட்டு வாங்கும் விலை!

ஐக்யூ நியோ 9 ப்ரோ ப்ரீ-புக்கிங் சலுகைகள்: இந்தியாவில் ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்பதிவுகளானது, ஐக்யூ இணையதளம் (iQOO Website ) மற்றும் அமேசான் இந்தியா (Amazon India) வழியாக பிப்ரவரி 8 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் தொடங்கும்.

ஐக்யூ நியோ 9 ப்ரோவை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் திரும்ப பெறக்கூடிய வைப்பு தொகையான (Refundable deposit) ரூ.1000 செலுத்தி இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யலாம். ப்ரீ-புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போனில் விலையில் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும் என்று ஐக்யூ நிறுவனம் அறிவித்துள்ளது.

எப்போது இந்திய அறிமுகம்? என்ன விலை? ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடானது (India Launch) பிப்ரவரி 22 ஆம் தேதியன்று நடைபெறும். சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.35,000 க்கு அறிமுகமாகி உள்ளதால், இந்தியாவில் இது ரூ.40,000 க்குள் என்கிற விலை நிர்யணயத்தின்கீழ் தான் அறிமுகமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo 9 Pro India PreBooking From February 8 Amazon Reveals Specifications Check Price Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X