வேற லெவல் ஐக்யூ போன்.. 120W சார்ஜிங்.. 50MP கேமரா.. 512GB மெமரி.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனம் இந்த டிசம்பர் மாதம் ஐக்யூ நியோ 9 மற்றும் ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன்கள் முதலில் சீனாவில் தான் அறிமுகமாகும். அதன்பின்பு தான் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஐக்யூ நியோ 9 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது ஐக்யூ நியோ 9 ப்ரோ போனின் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியான உள்ளது. இப்போது ஆன்லைனில் வெளியான இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஐக்யூ நியோ 9 ப்ரோ அம்சங்கள்: மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட் வசதியுடன் இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேசமயம் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும். பின்பு 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 920 சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும்.
மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
5000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் விரைவாக இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமிங் பிரியர்களுக்காகவே பேட்டரி ஹீட்டை தவிர்க்க கூலிங் டெக்னாலஜி ஆதரவுடன் இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ போன் அறிமுகமாகும். மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.
குறிப்பாக ஐக்யூ நியோ 9 ப்ரோ மற்றும் ஐக்யூ நியோ 9 போன்கள் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். மேலும் இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்த ஐக்யூ நியோ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








