வாங்குனா இத வாங்கனும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?
'வெயிட்டிங்கில் வெறியாகுது' என்று சொல்லும் அளவுக்கு அமோலெட் டிஸ்பிளே, 16ஜிபி ரேம், 1டிபி மெமரி, ஓஐஎஸ் கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற உச்ச கட்ட பிரம்மாண்ட அம்சங்களுடன் ஐக்யூ நியோ 8 (iQOO Neo 8) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐக்யூ நியோ 8 அம்சங்கள் (iQOO Neo 8 Specifications): இந்த ஐக்யூ மாடலில் 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 20:9 அஸ்பெக்ட் ரேசியோ, 1.5K ரெசொலூஷன் வருகிறது. அதோடு எச்டிஆர் 10+ (HDR10+), 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

அதோடு 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8+ Gen 1 4nm Mobile) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு ஓர்ஜின் ஓஎஸ் 3 (Origin OS 3) மற்றும் அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ஐக்யூ நியோ மாடலில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது.
இப்போது, 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. ஆகவே, சாம்சங் ஜிஎன்5 (Samsung GN5) சென்சாருடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமராவாகும்.
அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், இன்பிராரெட் சென்சார், டைப்-சி ஆடியோ மற்றும் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் வருகிறது. இந்த போனில் பிரம்மாண்ட பேட்டரி செட்டப் வருகிறது. 120W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் (Ultra-fast Flash Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஐக்யூ போனில் 5ஜி எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 7, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ் மற்றும் என்ஃஎப்சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த போன் லெதர் ஃபினிஷ் கொண்ட ஆரஞ்சு (Orange), எனாமல் கிளாஸ் ஃபினிஷ் கொண்ட ப்ளூ (Blue) மற்றும் கிரிஸ்டல் கிளாஸ் ஃபினிஷ் கொண்ட பிளாக் (Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த போனின் 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.29,350ஆகவும், 12 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ.32,870ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மாடலின் விலை ரூ.36,395 ஆக இருக்கிறது. இப்போது, அறிமுகம் செய்யப்பட்ட 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி மாடலின் விலை ரூ.42,005ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அனைத்து மாடல்களும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனைக்கு வந்துள்ளன. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற ஃபாஸ்ட் சார்ஜிங், அதிகப்படியான ரேம் மற்றும் மெமரி சப்போர்ட் இருப்பதால், மற்ற நாடுகளிலும் அதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போன் டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








