குறை சொல்லவே முடியாது: டிச.2 இல் 5G சிப்செட், 64MP ரியர் கேமராவுடன் வெளிவரும் புதிய போன்.!

|

விவோ நிறுவனத்தின் துணை நிறுவனமான iQOO டிசம்பர் 2 ஆம் தேதி புதிய iQOO நியோ 7 எஸ்இ எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது iQOO நிறுவனம் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த iQOO Neo 7 SE ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

 iQOO நியோ 7 எஸ்இ

iQOO நியோ 7 எஸ்இ

குறிப்பாக Dimensity சிப்செட், ட்ரிபிள் ரியர் கேமர உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த iQOO நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த iQOO நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பூமியின் மிக பெரிய மிதக்கும் நகரம்.! 60000 பேர் தங்க கூடிய பிரமாண்டமான ஆமை வடிவ கப்பல்.!பூமியின் மிக பெரிய மிதக்கும் நகரம்.! 60000 பேர் தங்க கூடிய பிரமாண்டமான ஆமை வடிவ கப்பல்.!

6.78-இன்ச் AMOLED டிஸ்பிளே

6.78-இன்ச் AMOLED டிஸ்பிளே

iQOO Neo 7 SE ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். மேலும் 2400 X 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓடியாங்க, ஓடியாங்க.. 5G போன்களை இதைவிட கம்மி விலையில் கிடைக்காது: ஆபர் போட்ட Amazon .!ஓடியாங்க, ஓடியாங்க.. 5G போன்களை இதைவிட கம்மி விலையில் கிடைக்காது: ஆபர் போட்ட Amazon .!

5G சிப்செட்

5G சிப்செட்

iQOO நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 8200 5G சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகத்தைக் கொடுக்கும். அதேபோல் இந்த போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்இந்த புதிய போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும்.

நல்லவரா? கெட்டவரா? இனி எல்லோருக்கும் 420! மஸ்க் வழங்கும் இன்பதிர்ச்சிக்கு ரெடியா இருங்க..நல்லவரா? கெட்டவரா? இனி எல்லோருக்கும் 420! மஸ்க் வழங்கும் இன்பதிர்ச்சிக்கு ரெடியா இருங்க..

16ஜிபி ரேம்

16ஜிபி ரேம்

குறிப்பாக iQOO நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள புதிய போனில் 8ஜிபி/12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

ஏர்டெல் நிறுவனமே பொறாமைப்படும் Jio-வின் இந்த திட்டங்களைப் பற்றித் தெரியுமா? அதிக நன்மைகள்.!ஏர்டெல் நிறுவனமே பொறாமைப்படும் Jio-வின் இந்த திட்டங்களைப் பற்றித் தெரியுமா? அதிக நன்மைகள்.!

64எம்பி பிரைமரி கேமரா

64எம்பி பிரைமரி கேமரா

புதிய iQOO நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்

120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்

விரைவில் அறிமுகமாகும் iQOO நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போனில் 4880 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் 5ஜி ஆதரவுடன் வெளிவரும். எனவே நாம் 5ஜி சேவையை பயன்படுத்த இந்த போன் கண்டிப்பாக நீண்ட நேர பேட்டரி பேக்கப் கொடுக்கும்.

மேலும் 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது iQOO நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

5ஜி, 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், புளூடூத், டூயல்-பேண்ட் வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த iQOO நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போன். மேலும் Black, Electric Blue மற்றும் Galaxy நிறங்களில் இந்த போன் அறிமுகமாகும். அதேபோல் பட்ஜெட் விலையில் இந்த iQOO நியோ 7 எஸ்இ போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
iQOO Neo 7 SE smartphone to debut on December 2 with AMOLED display, 64MP camera: Specs, Features and More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X