Just In
- 27 min ago
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- 47 min ago
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- 49 min ago
உங்களிடம் Netflix இருக்குதா ஓடியாங்க ஓடியாங்க.. சந்தோஷமான விஷயம்.! மிஸ் பண்ணாதீங்க
- 3 hrs ago
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
Don't Miss
- Movies
ஓடிடியில் வெளியாகும் முன்னே லீக்கான துணிவு HD பிரின்ட்.. நெட்பிளிக்ஸில் எப்போ ரிலீஸ் தெரியுமா?
- News
கணிக்க முடியாது.. வேண்டாம்! போதும் போதும் என்று முடிவு எடுத்த எடப்பாடி.. புட்டு புட்டு வைத்த புள்ளி
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Sports
அதனால் தான் அவர் கிங் கோலி.. என்னுடைய 10 வயது உனக்கு தான்.. சுப்மன் கில்லை உற்சாகப்படுத்திய கோலி
- Lifestyle
தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கேப் விடாம சிக்ஸ் அடிக்கும் iQoo- மிட் ரேன்ஜ் விலையில் 16ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் அறிமுகம்!
iQoo இந்த வாரம் இரண்டு புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அதன் 11 தொடரின் கீழ் அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஐக்யூ நிறுவனம் அதன் 11 தொடரின் கீழ் ஐக்யூ 11 ப்ரோ 5ஜி மற்றும் ஐக்யூ 11 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. இந்த ப்ரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ஐக்யூ நிறுவனம் ஐக்யூ நியோ 7 எஸ்இ என்ற ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆண்டு முடிய இருக்கும் நிலையில் ஐக்யூ நிறுவனம் தொடர்ந்து ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

ஐக்யூ நியோ 7 எஸ்இ
விவோவின் துணை பிராண்டான ஐக்யூ நிறுவனம் ஐக்யூ நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போனை மிட் ரேன்ஜ் விலைப்பிரிவில் அறிமுகம் செய்துள்ளது. ஐக்யூ நியோ 7 எஸ்இ அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐக்யூ நியோ 7 இன் வாரிசாக புது ஸ்மார்ட்போன்
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான ஐக்யூ நியோ 7 இன் வாரிசாக இது அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஐக்யூ நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்த வெளியான தகவலில் பெரும்பாலானவை இதில் இடம்பெற்றுள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 8200 எஸ்ஓசி
iQoo Neo 7 SE ஸ்மார்ட்போனானது 1,080 X 2,400 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.78-இன்ச் முழு-HD+ AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. 20:9 விகித பேனல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் உச்ச பிரகாசம் இதில் இருக்கிறது. பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதி கொண்ட பிளாட் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 8200 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

10 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம்
ஐக்யூ 7 எஸ்இ கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. OIS உடன் 64MP பிரதான கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. ஐக்யூ நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போனை வெறும் 10 நிமிடங்களில் 60 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.

iQOO Neo 7 SE விலை மற்றும் கிடைக்கும் தன்மை
iQOO Neo 7 SE விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம், இந்த ஸ்மார்ட்போனானது ஐந்து வெவ்வேறு சேமிப்பு விருப்பங்கள் மற்றும் மூன்று வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனானது எலக்ட்ரிக் ப்ளூ, இன்டர்ஸ்டெல்லர் ப்ளாக் மற்றும் கேலக்ஸி வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது.

8ஜிபி ரேம் வேரியண்ட் விலை
iQOO Neo 7 SE ஸ்மார்ட்போனானது தற்போது சீனாவில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 2,099 (தோராயமாக ரூ.24,800) எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 2,299 (தோராயமாக ரூ.27,100) எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ரேம்
அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 2,499 (தோராயமாக ரூ.29,500) ஆகவும் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 2,799 (தோராயமாக ரூ.33,100) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டாப் எண்ட் மாறுபாடான ஐக்யூ நியோ 7 எஸ்இ இன் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 2,899 (தோராயமாக ரூ.34,300) ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா?
சீனாவை தவிர பிற நாட்டு சந்தைகளில் iQOO நியோ 7 SE அறிமுகம் செய்யப்படுமா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. iQOO Neo 7 இந்தியா உட்பட பல பிராந்தியங்களில் தொடங்கப்பட்டது. எனவே இந்த ஐக்யூ நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போன் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470