iQOO Neo 7 Racing Edition போன் கூட எந்த போன் ரேஸ் விட்டாலும் ஜெயிக்காது.! ஏன்னா இது.?

|

iQOO Neo 7 ரேசிங் எடிஷன் சீனாவில் உறுதியளித்தபடி அறிமுகப்படுத்தப்பட்டது. மேம்படுத்தப்பட்ட ஹார்ட்வேர்களுடன் iQOO Neo 7 இன் பிரீமியம் பதிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. செல்ஃபி ஷூட்டருக்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட், டிரிபிள் கேமரா அமைப்பை வைக்க ஒரு செவ்வக மாட்யூல் மற்றும் பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகியவற்றுடன் கலர்புல் நிறங்களில் வருகிறது.

iQOO Neo 7 ரேசிங் எடிஷன் இந்தியா உட்படச் சீனாவிற்கு வெளியே உள்ள சந்தைகளிலும் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நிறுவனம் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது. iQOO Neo 7 ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை என்ன? இதன் ஸ்டோரேஜ் வேரியண்ட் விபரங்கள் என்ன? இதில் என்ன சிறப்பான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது போன்ற விபரங்களை இப்போது பார்க்கலாம்.

iQOO Neo 7 Racing Edition போன் கூட எந்த போன் ரேஸ்விட்டாலும் ஜெயிக்காது

iQOO Neo 7 Racing Edition சிறப்பம்சம்
முதலில் இந்த ஸ்மார்ட்போனின் முக்கியமான சிறப்பம்ச விபரங்களை உற்று நோக்கலாம். iQOO நியோ 7 ரேசிங் எடிஷன் சாதனம் 6.78' இன்ச் FHD+ E5 AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது செல்ஃபி ஸ்னாப்பருக்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடன், 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 120Hz ரெப்ரெஷ் ரேட் வீதம், HDR10+ மற்றும் பிளாட் விளிம்புகளைக் கொண்டுள்ளது. இந்த ரேஸிங் எடிஷன் ஸ்மார்ட்போன் சக்தி வாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 SoC சிப்செட் உடன் வருகிறது.

இது 16 ஜிபி வரை ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகியவற்றிற்காக Adreno GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த iQOO Neo 7 Racing Edition ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான OriginOS தனிப்பயன் ஸ்கின் உடன் இயங்குகிறது. iQOO நியோ 7 ரேசிங் எடிஷனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ, ஐஆர் பிளாஸ்டர் மற்றும் யூஎஸ்பி டைப்-சி ஆடியோ ஆகியவற்றிற்கான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

iQOO Neo 7 Racing Edition போன் கூட எந்த போன் ரேஸ்விட்டாலும் ஜெயிக்காது

இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் சார்ஜிங் மற்றும் டேட்டா ஒத்திசைவுக்கான USB டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். ஃபோன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை, இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) உடன் கூடிய 50MP பிரைமரி சென்சார், 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் உடன் வருகிறது. முன்பக்கத்தில் இது 16MP ஸ்னாப்பரை கொண்டுள்ளது. சிறந்த கேமரா அனுபவத்தை இந்த சாதனம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரி, இப்போது இந்த சாதனத்தின் விலை பற்றிப் பார்க்கலாம்.

iQOO நியோ 7 ரேசிங் எடிஷன் விலை
iQOO Neo 7 ரேசிங் எடிசனின் 8GB RAM மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடல் விலை CNY 2,799 ஆக இருக்கிறது. இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 33,300 ஆகும். இதன் 12GB + 256GB மாடல் ரூ. 35,700 என்ற விலையிலும், 16GB + 256GB மாடல் ரூ. 39,300 விலையிலும் மற்றும் 16GB + 512GB மாடல் விலை ரூ. 43,000 இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த iQOO Neo 7 Racing Edition உடன் எந்த போனையும் ரேஸ் விட்டுடாதீங்க ஏன்னா இது ரேஸிங் எடிஷன் பாஸ்.. ஸ்பீட் பிச்சுக்கும்.!

Best Mobiles in India

English summary
iQOO Neo 7 Racing Edition Launched With 120W Charging

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X