சும்மா நச்சுனு இருக்கே: அட்டகாசமான 5ஜி போனை இறக்கிவிடும் iQOO.! அறிமுகம் எப்போது தெரியுமா?
ஐக்யூ (iQOO) நிறுவனம் தனது புதிய ஐக்யூ நியோ 7 ப்ரோ (iQoo Neo 7 Pro) ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போனின் டீசர் சமீபத்தில் வெளியானது. குறிப்பாக இந்த போன் இந்த மாதம் இறுதியில் அறிமுகமாகும் அல்லது அடுத்த மாதம் துவத்தில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் ட்ரிபிள் ரியர் கேமரா, தரமான பிராசஸர் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் ஐக்யூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ஐக்யூ நியோ 7 ப்ரோ போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஐக்யூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சாம்சங் இ5 AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு இந்த போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இதன் டிஸ்பிளே ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஐக்யூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள சிப்செட் ஆனது சிறந்த செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் புதிய ஐக்யூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஐக்யூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த புதிய ஐக்யூ போன் வெளிவரும்.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஐக்யூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஐக்யூ நியோ 7 ப்ரோ போன்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஐக்யூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஐக்யூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications








