அடுத்த மாதம் லான்ச் ஆகும் இந்த போனுக்கு நிறைய பேர் வெயிட்டிங்! இதுல அப்படி என்ன இருக்குது?
ஐக்யூ நிறுவனம் தற்போது பட்ஜெட் விலை 5ஜி போன்களை அறிமுகம் செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது என்றே கூறலாம். குறிப்பாக மோட்டோ, சியோமி நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் சமீபத்தில் பல 5ஜி போன்களை அறிமுகம் செய்துள்ளது இந்த ஐக்யூ நிறுவனம்.
இந்நிலையில் ஐக்யூ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது ஐக்யூ நியோ 7 ப்ரோ எனும் ஸ்மார்ட்போனை தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய போன் வரும் ஜூன் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக பல்வேறு நிறுவனங்களின் பிரீமியம் போன்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் தரமான அம்சங்களுடன் இந்த ஐக்யூ நியோ 7 ப்ரோ போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஐக்யூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சாம்சங் இ5 AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு இந்த போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இதன் டிஸ்பிளே ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.
அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஐக்யூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள சிப்செட் ஆனது சிறந்த செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் புதிய ஐக்யூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
குறிப்பாக 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஐக்யூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த புதிய ஐக்யூ போன் வெளிவரும்.
5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஐக்யூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஐக்யூ நியோ 7 ப்ரோ போன்.

மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஐக்யூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஐக்யூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications








