Home
Mobile

பக்கா பிரீமியம்.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. 120W சார்ஜிங்.. அசத்தலான iQoo போனுக்கு ஆஃபர்.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023 விற்பனை பிரைம் உறுப்பினர்களுக்காக அக்டோபர் 7 ஆம் தேதி (இன்று) தொடங்க உள்ளது. அதேபோல் அக்டோபர் 8-ம் தேதி அனைவரும் இந்த சிறப்பு விற்பனையில் சாதனங்களை வாங்க முடியும். குறிப்பாக அமேசான் விற்பனையில் புதிய போன்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஐக்யூ நிறுவனத்தின் தரமான ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி (iQoo Neo 7 Pro 5G) போனையும் இந்த அமேசான் சிறப்பு விற்பனையில் கம்மி விலையில் வாங்க முடியும். குறிப்பாக 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி போன் இந்தியாவில் ரூ.37,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

120W சார்ஜிங்.. அசத்தலான iQoo போனுக்கு ஆஃபர்.. எந்த மாடல்?

ஆனால் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023 விற்பனையின் போது இந்த 12ஜிபி ரேம் கொண்ட ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி போன் ரூ.30,999 விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தள்ளுபடிகள் மற்றும் வங்கி சலுகைகள் பயன்படுத்தி இந்த ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி போனை ரூ.30,999 விலையில் வாங்க முடியும்.

ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல அசத்தலான டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஐக்யூ போன். இதில் AMOLED டிஸ்பிளே இருப்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 (Snapdragon 8+ Gen 1) சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற பயன்களுக்கு இந்த போன் அருமையாகப் பயன்படும். மேலும் Funtouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 ( Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா(Samsung GN5 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

120W சார்ஜிங்.. அசத்தலான iQoo போனுக்கு ஆஃபர்.. எந்த மாடல்?

ப்ராக்ஸிமிட்டி சென்சார், இ-காம்பஸ், கைரோஸ்கோப் உள்ளிட்ட பல சென்சார் வசதிகளைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஐக்யூ போன். மேலும் இந்த போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. அதேபோல் 120 வாட்ஸ் ஃபிளாஷ் சார்ஜிங் (120W FlashCharge) வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு 5ஜி, 4ஜி எல்இடி, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், ஜிஎன்எஸ்எஸ். யுஎஸ்பி டைப்-போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த போனின் எடை 194.5 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQoo Neo 7 Pro 5G will be available for Rs 30,990 during the Amazon Great Indian Festival sale : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X