மிரள விடும் ஆஃபர்.. 120W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 256GB மெமரி.. 64MP கேமரா.. எந்த போன்?
ஐக்யூ நிறுவனம் தனது ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தற்போது விலையைக் குறைத்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 64எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது ஐக்யூ நியோ 7 5ஜி போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.
முன்பு 8ஜிபி ரேம் கொண்ட ஐக்யூ நியோ 7 5ஜி போன் ரூ.27,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் இதன் 12ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் ரூ.31,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட விலை குறைப்பின் மூலம் 8ஜிபி ரேம் கொண்ட ஐக்யூ நியோ 7 5ஜி போனை ரூ.24,999 விலையிலும், இதன் 12ஜிபி ரேம் கொண்ட வேரியண்டை ரூ.27,999 விலையிலும் வாங்க முடியும்.

இந்த ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சாம்சங் இ5 அமோலெட் (6.78-inch FHD+ Samsung E5 AMOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஆக்டோ-கோர் பவர்ஃபுல் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்செட் (octa-core powerful MediaTek Dimensity 8200) வசதியைக் கொண்டு இந்த ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனின் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். Funtouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன்.
ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் வாங்க கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
64எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போன் . பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு ஐக்யூ நியோ 7 5ஜி ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.
அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இந்த போனில்உள்ளது. பின்பு 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன். குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த போன் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








