Home
Mobile

10 நிமிடங்கள் போதும்.. இந்த 5ஜி போன் வேறலெவல்.! காத்திருந்து சரியான சம்பவம் செய்த iQoo.!

ஐக்யூ நிறுவனம் புதிய ஐக்யூ நியோ 7 5ஜி (iQOO Neo 7 5G) என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் மற்றும் சியோமி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் தனித்துவமான அம்சங்களுடன் ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐக்யூ நியோ 7 5ஜி அம்சங்கள்

இப்போது ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 320 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஐக்யூ 5ஜி போன்.

 இந்த 5ஜி போன் வேறலெவல்.! காத்திருந்து சரியான சம்பவம் செய்த iQoo.!

இந்த புதிய ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் 4என்எம் மீடியாடெக் Dimensity 8200 5G சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சக்திவாய்ந்த சிப்செட் உடன் Mali G610 ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

குறிப்பாக Funtouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். மேலும் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம்.

 இந்த 5ஜி போன் வேறலெவல்.! காத்திருந்து சரியான சம்பவம் செய்த iQoo.!

ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவாகப் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். இதுதவிர போர்ட்ரெய்ட், நைட், மேக்ரோ, டைம்-லாப்ஸ் போட்டோகிராபி, ஸ்லோ மோஷன், பனோரமா மற்றும் டூயல்-வியூ வீடியோ உள்ளிட்ட பல கேமரா அமச்ங்களை வழங்குகிறது இந்த புதிய ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு இதை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் ஃபிளாஷ் சார்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இது இந்த போனை 10 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்துவிடும் என்று நிறுவனம் கூறுகிறது. குறிப்பாக பாஸ்ட் சார்ஜிங் வசதியிலும் அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ.

 இந்த 5ஜி போன் வேறலெவல்.! காத்திருந்து சரியான சம்பவம் செய்த iQoo.!

அதேபோல் இந்த புதிய ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. பின்பு 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த போன் கருப்பு மற்றும் நீல நிறத்தில் வெளிவந்துள்ளது.

என்ன விலை?

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.33,999-ஆக உள்ளது. இன்று (பிப்ரவரி 16) முதல் அமேசான் மற்றும் ஐக்யூ தளங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

 இந்த 5ஜி போன் வேறலெவல்.! காத்திருந்து சரியான சம்பவம் செய்த iQoo.!

என்னென்ன சலுகைகள்

மேலும் ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போனை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய 5ஜி போனுக்கு அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
iQoo Neo 7 5G With 120W Fast Charging Launched in India: Price, Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X