64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
ஐக்யூ நிறுவனம் இந்தியாவில் புதிய iQOO Neo 7 5G ஸ்மார்ட்போனை வரும் பிப்ரவரி 16-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக கேமிங் பயனர்களுக்குத் தகுந்தபடி இந்த புதிய போன் உருவாக்கப்பட்டுள்ளதாக ஐக்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பட்ஜெட் விலை?
ஒன்பிளஸ், மோட்டோ நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் இந்த iQOO Neo 7 5G போனை பட்ஜெட் விலையில் இறக்கிவிட முடிவு செய்துள்ளது ஐக்யூ நிறுவனம். இப்போது இணையதளத்தில் கசிந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

டிஸ்பிளே எப்படி?
iQOO Neo 7 5Gஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும். குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் கேமிங், வீடியோ போன்ற அனைத்திற்கும் அருமையாகப் பயன்படும். குறிப்பாக இந்த ஐக்யூ போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும்.
கேமிங் சிப்செட் வசதி
முன்பு கூறியது போல கேமிங் சிப்செப் வசதியுடன் இந்த போன் வெளிவருவதால் நம்பி வாங்கலாம். அதாவது iQOO Neo 7 5G ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 8200 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அனைத்து ஆப்ஸ்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.
ஸ்டோரோஜ் வசதி
இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போன் வெளிவரும்.
ட்ரிபிள் ரியர் கேமரா
விரைவில் அறிமுகமாகும் iQOO Neo 7 5Gஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டு இந்த போன் வெளிவரும். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டு வெளிவரும் இந்த ஐக்யூ ஸ்மார்ட்போன்.

சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதி
இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். அதாவது 10 நிமிடங்களில் இந்த போன் 50 சதவீதம் சார்ஜ் ஆகும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் கனெக்டிவிட்டி
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் அறிமுகமானதும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








