Home
Mobile

அறிமுகத்திற்கு முன்பே வெளியான iQOO Neo 7 5G போனின் விலை மற்றும் சலுகைகள்.! ரெடியா இருங்க.!

ஐக்யூ நிறுவனம் புதிய ஐக்யூ நியோ 7 5ஜி (iQOO Neo 7 5G)என்ற புதிய ஸ்மார்ட்போனை வரும் பிப்ரவரி 16-ம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் தரமான சிப்செட், தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அட்டகாசமான கேமரா வசதியுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக சலுகை

இந்நிலையில்iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு, இதன் விலை மற்றும் சலுகைகள் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iQOO Neo 7 5G போன் ரூ.30,999-விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால் அறிமுக சலுகையாக 8ஜிபி ரேம் கொண்ட iQOO Neo 7 5G மாடலை ரூ.26,999-விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுகத்திற்கு முன்பே வெளியான iQOO Neo 7 5G போனின் விலை.!

அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் மாடல் ரூ.34,999-விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 12ஜிபி ரேம் கொண்ட iQOO Neo 7 5G மாடலை அறிமுக சலுகையாக ரூ.30,999-விலையில் வாங்க முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய டிஸ்பிளே

மேலும் இப்போது iQOO Neo 7 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும். குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அறிமுகத்திற்கு முன்பே வெளியான iQOO Neo 7 5G போனின் விலை.!

20 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த iQOO Neo 7 5G மாடல்.

தனித்துவமான சிப்செட்

iQOO Neo 7 5G ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 8200 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் FunTouchOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகமாகும்.

அறிமுகத்திற்கு முன்பே வெளியான iQOO Neo 7 5G போனின் விலை.!

iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போனின் கேமராவுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது ஐக்யூ நிறுவனம்.

அறிமுகத்திற்கு முன்பே வெளியான iQOO Neo 7 5G போனின் விலை.!

கனெக்டிவிட்டி

வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
iQOO Neo 7 5G phone price and offers were revealed before the launch: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X