Home
Mobile

தட்டி தூக்குறாங்க.. 120W சார்ஜிங்.. 64MP கேமரா.. ஐக்யூ 5ஜி போனுக்கு விலைகுறைப்பு.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி iQOO Neo 7 5G) ஸ்மார்ட்போன் முன்பு ரூ.31,999 விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டு ரூ.27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

தட்டி தூக்குறாங்க.. ஐக்யூ 5ஜி போனுக்கு விலைகுறைப்பு.. எந்த மாடல்?

ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி அம்சங்கள் (iQOO Neo 7 5G specifications): 6.68-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சாம்சங் இ5 அமோலெட்(6.78-inch FHD+ Samsung E5 AMOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் (1300 nits brightness), 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் ஆக்டோ-கோர் பவர்ஃபுல் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்செட் (octa-core powerful MediaTek Dimensity 8200)வசதியைக் கொண்டு இந்த ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

Funtouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

64எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போன் . பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு ஐக்யூ நியோ 7 5ஜி ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.

தட்டி தூக்குறாங்க.. ஐக்யூ 5ஜி போனுக்கு விலைகுறைப்பு.. எந்த மாடல்?

குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இந்த போனில்உள்ளது. பின்பு 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போன்.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்களை வாங்குவதை விட தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் கிடைக்கும் இந்த ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி போனை வாங்குவது மிகவும் நல்லது. அதேபோல் ஐக்யூ நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Neo 7 5G gets price cut in India: check new price, specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X