Home
Mobile

தள்ளுபடினா இப்படி இருக்கனும்! ரூ.5000 தள்ளுபடியை பெற்ற பிரபல நிறுவனத்தின் 5G போன்.!

ஐக்யூ நிறுவனம் சியோமி, மோட்டோ நிறுவனங்களை விட அதிநவீன ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஐக்யூ நிறுவனம் பிரபலமான ஸ்மார்ட்போன் ஒன்றுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஐக்யூ நிறுவனம் தற்போது iQOO Neo 6 மாடலுக்கு தான் விலைகுறைப்பு அறிவித்துள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iQOO Neo 6 ஸ்மார்ட்போன் ரூ.29,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் இந்த போனை ரூ.24,999-விலையில் வாங்க முடியும்.

ரூ.5000 தள்ளுபடியை பெற்ற பிரபல நிறுவனத்தின் 5ஜி போன்.!

அதேபோல் இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.33,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்போது இந்த மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.29,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இப்போது இந்த iQOO Neo 6 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

iQOO Neo 6 ஸ்மார்ட்போன் ஆனது 6.62-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் E4 AMOLED டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியுடன் Adreno 650 GPU கொண்டு வெளிவந்துள்ளது iQOO Neo 6 ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு Funtouch OS சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனால் கூடிய விரைவில் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

ரூ.5000 தள்ளுபடியை பெற்ற பிரபல நிறுவனத்தின் 5ஜி போன்.!

குறிப்பாக இந்தiQOO Neo 6 ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

குறிப்பாக 4700 எம்ஏஎச் பேட்டரி வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த iQOO Neo 6 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

இந்த iQOO Neo 6 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், என்எப்சி, வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த iQOO Neo 6 ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரூ.5000 தள்ளுபடியை பெற்ற பிரபல நிறுவனத்தின் 5ஜி போன்.!

அதேபோல் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதியும் இதில் உள்ளது. பின்பு இந்த போனின் அனைத்து சிறப்பு அம்சங்களும் உள்ளது. தற்போது இந்த போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
iQOO Neo 6 Price Slashed in India: check out the new price And Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X