Home
Mobile

இதோ இந்த மாதம் வருது: 12ஜிபி ரேம், திரவ குளிரூட்டல் ஆதரவோடு ஐக்யூ நியோ 5எஸ்!

ஐக்யூ நியோ 5எஸ் வெளியீடு டிசம்பர் 20 ஆம் தேதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் ஐக்யூ நியோ தொடர் வெளியீட்டுக்கான நிகழ்வை திட்டமிட்டிருக்கிறது. ஐக்யூ புதிய நியோ சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. நிறுவனம் ஐக்யூ நியோ தொடர் வெளியீட்டு நிகழ்வில் ஐக்யூ நியோ 5எஸ் சாதனத்தை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஐக்யூ அதன் வெய்வோ பதிவில் டிசம்பர் 20 ஆம் தேதியில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படும் என்பது உறுதிப்படுத்தியுள்ளது. நிறுவனம் இந்த நிகழ்வில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என இந்த இடுகையில் குறிப்பிட்டுள்ளது. இது ஐக்யூ நியோ 5 எஸ் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.ஆரிஜின் ஓஎஸ் ஓசன் அவுட் ஆஃப் பாக்ஸை இயக்கும் முதல் ஐக்யூ போன் இதுவாகும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல் ஐக்யூ நியோ 5எஸ் ஸ்மார்ட்போன் உடன் மிகவும் மலிவு விலையில் ஐக்யூ நியோ 5 எஸ்இ அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்யூ நியோ 5எஸ் விவரக்குறிப்புகள் குறித்து வெளியான தகவல்களை பார்க்கலாம்.

ஐக்யூ நியோ 5எஸ் விவரக்குறிப்புகள்

ஐக்யூ நியோ 5எஸ் விவரக்குறிப்புகள்

ஐக்யூ நியோ 5எஸ் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இது 6.56-இன்ச் 120Hz OLED பேனலைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் டிஸ்ப்ளே விளிம்புகளில் வளைந்திருக்கும் வடிவமைப்போடு 10 பிட் வண்ணத்திற்கான ஆதரவை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஐக்யூ நியோ 5எஸ் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா உட்பட மூன்று கேமராக்கள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆப்டிகல் பட உறுதிப்படுத்தலுக்கான ஆதரவையும் இது கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி சிப்செட்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி சிப்செட்

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது. அதோடு இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு கூடிய 4500 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட் வகைகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

8 ஜிபி ரேம் வேரியண்ட் வசதி

8 ஜிபி ரேம் வேரியண்ட் வசதி

கூடுதல் அம்சங்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் இரண்டாம் தலைமுறை திரவ குளிரூட்டப்பட்ட வெப்பச் சிதறல் அமைப்பைக் கொண்டிருக்கும் எனவும் ஸ்டீரியோ ஸ்பிக்கர்கள் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஐக்யூ இசட் 5 சைபர் கிரிட் வண்ண மாறுபாடு இந்தியாவில் 8 ஜிபி ரேம் வேரியண்ட் உடன் கிடைக்கிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.23990 ஆக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு செப்டம்பரில் மிஸ்டிக் ஸ்பேஸ் மற்றும் ஆர்க்டிக் டான் வண்ண விருப்பத்தில் இந்த போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே

6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே

அதேபோல் Vivo ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் துணை நிறுவனமான iQOO விரைவில் புதிய ஸ்மார்ட்போன், Neo 6 எனப்படும் புதிய இடைப்பட்ட ஸ்மார்ட்போனில் வேலை செய்து கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் உலகின் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் Qualcomm Snapdragon 888 சிப்செட் ஸ்போர்ட்டிங் சாதனங்களில் ஒன்றாக மாறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பட்டியல் கூகுள் பிளே கன்சோலில் காணப்பட்டது.புதிய iQOO Neo 6 ஸ்மார்ட்போன் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. புதிய iQOO Neo 6 ஸ்மார்ட்போன் ஆனது 6.62 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே உடன் கூடிய 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட 398ppi பிக்சல் அடர்த்தியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Iqoo Neo 5s Smartphone Might Launching On this Month: Expected Price, Specs.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X