Home
Mobile

ரேபிட் சார்ஜிங் வசதி, 50 எம்பி கேமரா, 12ஜிபி ரேம் வசதியோடு ஐக்யூ நியோ 5எஸ், ஐக்யூ நியோ 5எஸ்இ அறிமுகம்: தயாரா?

ஐக்யூ தனது தயாரிப்பு வழங்கலை தொடர்ந்து விரிவுப்படுத்தி வருகிறது. அதன்படி தொடர்ந்து இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது நிறுவனம். புதிய ஐக்யூ நியோ 5எஸ் மற்றும் ஐக்யூ நியோ 5 எஸ்இ சாதனங்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அதே புதுப்பிப்பு வீதம், வேகமான விரைவான சார்ஜிங் ஆதரவு, கேம்மை மையப்படுத்திய அம்சங்கள் உள்ளிட்ட பலவற்றை கொண்டு வந்திருக்கின்றன. புதிய ஐக்யூ நியோ தொடர் மற்றும் இந்தியாவில் கிடைக்கும் தன்மை குறித்து அறிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இதோ.

ஐக்யூ நியோ 5எஸ், ஐக்யூ நியோ 5 எஸ்இ

ஐக்யூ நியோ 5எஸ், ஐக்யூ நியோ 5 எஸ்இ

ஐக்யூ நியோ 5எஸ், ஐக்யூ நியோ 5 எஸ்இ சாதனத்தின் விலை விவரங்களை பார்க்கலாம். ஐக்யூ நியோ 5 எஸ்இ சாதனமானது புதிய தொடரில் மிகவும் மலிவு விலை சாதனமாகும். இந்த புதிய ஐக்யூ நியோ 5 எஸ்இ ஸ்மார்ட்போனானது மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை தோராயமாக ரூ.26,100 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.28,500 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.31,000 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஐக்யூ நியோ 5எஸ் வேரியண்ட்

ஐக்யூ நியோ 5எஸ் வேரியண்ட்

அதேபோல் ஐக்யூ நியோ 5எஸ் ஸ்மார்ட்போனானது மூன்று மாடல்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடலான 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.32,100 ஆக இருக்கும் எனழும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.34,500 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை தோராயமாக ரூ.38000 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஐக்யூ நியோ 5எஸ் அம்சங்கள்

ஐக்யூ நியோ 5எஸ் அம்சங்கள்

ஐக்யூ நியோ 5எஸ் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம். ஐக்யூ நியோ 5எஸ் ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 6.56 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே பேனலை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டிருக்கும் எனவும் இது மையத்தில் வைக்கப்பட்டுள்ள பஞ்ச் ஹோல் கட்அவுட்டை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்598 முதன்மை சென்சார், 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் என மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி

ஹூட்டின் கீழ், ஐக்யூ நியோ 5எஸ் ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 4500 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு இது ஆண்ட்ராய்டு 12 மூலம் முதன்மையான ஒரிஜன் ஓஎக்ஸ் ஓசன் வசதியோடு இயக்கப்படுகிறது.

16 மெகாபிக்சல் செல்பி கேமரா

16 மெகாபிக்சல் செல்பி கேமரா

ஐக்யூ நியோ 5எஸ் சாதனத்தை காட்டிலும் ஐக்யூ நியோ 5 எஸ்இ சாதனம் இரண்டு வேறுபட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய ஐக்யூ நியோ 5 எஸ்இ ஸ்மார்ட்போனானது முழு எச்டி ப்ளஸ் தீர்மானம் மற்றும் அதிக 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 6.3 இன்ச் எல்சிடி பேனலை வெளிப்படுத்துகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவைக் கொண்டிருக்கிறது.

50 எம்பி பிரைமரி ஷூட்டர்

50 எம்பி பிரைமரி ஷூட்டர்

பின்புறத்தில் ஐக்யூ நியோ ஒரே மாதிரியான டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 50 எம்பி பிரைமரி ஷூட்டர், 8 எம்பி பல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் வசதியோடு வருகிறது. ஹூட்டின் கீழ் ஐக்யூ நியோ 5 எஸ்இ சாதனமானது பழைய ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு இணைக்கப்பட்டுள்ளது. ஐக்யூ நியோ 5 எஸ்இ ஸ்மார்ட்போனானது 4500 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு 55 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 5ஜி, 4ஜி, வைஃபை மற்றும் வழக்கமான இணைப்பு விருப்பங்களை கொண்டிருக்கிறது. இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனானது திரவ குளிரூட்டும் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது.

டிசம்பர் 28 முதல் வாங்குவதற்கு கிடைக்கும்

டிசம்பர் 28 முதல் வாங்குவதற்கு கிடைக்கும்

ஐக்யூ நியோ 5 தொடர் ஸ்மார்ட்போனானது சீனாவில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு தயாராக இருக்கிறது. ஐக்யூ நியோ 5 எஸ் ஸ்மார்ட்போனானது டிசம்பர் 24 முதல் ஷிப்பிங்கிற்கு வரும் என கூறப்படுகிறது. ஐக்யூ நியோ 5 எஸ்இ ஸ்மார்ட்போனானது டிசம்பர் 28 முதல் வாங்குவதற்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த தகவல் தற்போது வரை தெரிவிக்கவில்லை. அதே சமயத்தில் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதியோடு ஐக்யூ 9 தொடரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

Best Mobiles in India

English summary
IQOO Neo 5S, IQOO Neo 5 SE Announced With Triple Cameras, 120HZ RefreshRate, 50 MP Camera: India Availability Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X