மார்ச் 16 அறிமுகமா: 12 ஜிபி ரேம், 48 எம்பி கேமராவோடு ஐக்யூ நியோ 5- எல்லாமே கொஞ்சம் ஒஸ்தி!

|

ஐக்யூ நியோ 5 ஸ்மார்ட்போன் மார்ச் 16 ஆம் தேதி அன்று வெளியாகும் என தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. விவோ துணை பிராண்ட்டான ஐக்யூ ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெய்போவில் வெளியிடப்பட்ட டீசர் மூலம் தெரியவந்தது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட ஐக்யூ நியோ 3 5ஜி அடுத்த புதிய ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

ஐக்யூ நியோ 5 ஸ்மார்ட்போன்

ஐக்யூ நியோ 5 ஸ்மார்ட்போன்

ஐக்யூ நியோ 5 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. ஐக்யூ நியோ 5 ஸ்மார்ட்போன் சாம்சங்கின் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, பின்புறத்தில் மல்டி கேமரா அமைப்புடன் வருகிறது.

ஐக்யூ நியோ 5 வெளியீட்டுத் தேதி

வெய்போவின் அதிகாரப்பூர்வ ஐக்யூ கணக்கு ஒன்று சீனாவில் ஐக்யூ நியோ 5 வெளியீட்டுத் தேதியை குறிக்கும் டீசரை வெளியிட்டுள்ளது. வரவிருக்கும் ஐக்யூ ஸ்மார்ட்போன் துளை பஞ்ச் வடிவமைப்பு கொண்டிருக்கும் என டீசர் படம் குறிக்கிறது. ஐக்யூ நியோ 5 குறித்த கூடுதல் விவரங்கள் தற்போதுவரை தெரியவில்லை.

ஐக்யூ நியோ 5 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

ஐக்யூ நியோ 5 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கையில், டிப்ஸ்டர் வெய்போவில் ஐக்யூ நியோ 5 விலை மற்றும் அம்சங்கள் குறித்த தகவலை வெளியிட்டார். இது 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு விலையுடன் இந்திய விலை மதிப்புப்படி ரூ.34000 என்ற விலையில் வரும் என தெரிவிக்கிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.37,500 என்ற விலையில் இறுக்கும் எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு விலை இந்திய மதிப்புப்படி ரூ.38,600 ஆக இருக்கலாம் எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.46600 ஆக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

120 ஹெர்ட்ஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே

120 ஹெர்ட்ஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே

ஐக்யூ நியோ 5 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆகியவை கொண்டிருக்கும் எனவும் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

4400 எம்ஏஎச் பேட்டரி

4400 எம்ஏஎச் பேட்டரி

ஐக்யூ நியோ 5 ஸ்மார்ட்போன் 4400 எம்ஏஎச் பேட்டரி, 88 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 66 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டிருக்கும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 16 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Iqoo Neo 5 Smartphone May Launching on March 16: Expected Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X