பிஐஎஸ் சான்றிதழ் வாங்கியாச்சு., இனி அறிமுகம் மட்டும்தான்: விரைவில் வரும் ஐக்யூ நியோ 5!

|

ஐக்யூ நியோ 5 ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தாண்டு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய தரநிலை பணியக சான்றிதழை பெற்றுள்ளது. இதன்மூலம் இந்த சாதனம் இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் விரைவில் ஐக்யூ நியோ 5 வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் அறிமுக தேதி வெகு தொலைவில் இல்லை என்பதை பிஐஎஸ் சான்றிதழ் குறிக்கிறது.

பிஐஎஸ் சான்றிதழில் ஐக்யூ நியோ 5

பிஐஎஸ் சான்றிதழில் ஐக்யூ நியோ 5

இதன் மாடல் எண் விவோ ஐ2021 உடன் சான்றிதழ் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஐக்யூ நியோ 5-ன் கண்ணாடி குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இதை ஆரம்பத்தில் டிப்ஸ்டர் முகுல் சர்மா கண்டறிந்தார். அதேபோல் ஐக்யூ 7 லெஜண்ட் ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்யூ 7 ஸ்மார்ட்போன்

ஐக்யூ 7 ஸ்மார்ட்போன்

ஐக்யூ இந்திய இயக்குனரான ககன் அரோரா. இதுகுறித்த அளித்த தகவலின்படி ஐக்யூ 7 சாதனம் இம்மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்ற வகையில் தகவல்களை கூறினார். இதுகுறித்து முன்னதாகவே டீஸ் செய்யப்பட்டது. அதேபோல் ஐக்யூ 7 லெஜண்ட் ஸ்மார்ட்போன் விலை குறித்து பார்க்கையில் இது ரூ.40,000-த்துக்கு கீழ் இருக்கும் என கூறப்படுகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி செயலி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி செயலி

ஐக்யூ நியோ 5 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. ஐக்யூ நியோ 5 ஸ்மார்ட்போன் சாம்சங்கின் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, பின்புறத்தில் மல்டி கேமரா அமைப்புடன் வரும் என கூறப்படுகிறது.

ஐக்யூ நியோ 5 முன்னதாக வெளியான விவரங்கள்

ஐக்யூ நியோ 5 முன்னதாக வெளியான விவரங்கள்

ஐக்யூ நியோ 5 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆகியவை கொண்டிருக்கும் எனவும் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

ஐக்யூ நியோ 5 விலை விவரங்கள்

ஐக்யூ நியோ 5 விலை விவரங்கள்

சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் விலை குறித்து பார்க்கையில், ஐக்யூ நியோ 5 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.28,100 ஆக இருக்கிறது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.30,400 ஆகவும் இருக்கிறது. அதேபோல் டாப் எண்ட் மாடலாக 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விலை இந்திய மதிப்புப்படி ரூ.33,700 ஆக இருக்கிறது.

ஐக்யூ நியோ 5 டிஸ்ப்ளே அளவு

ஐக்யூ நியோ 5 டிஸ்ப்ளே அளவு

ஐக்யூ நியோ 5 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அளவு குறித்து பார்க்கையில், இது 6.62 இன்ச் 120 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி பேனலுடன் வருகிறது. இதன் மையத்தில் செல்பி கேமரா பஞ்ச் ஹோல் வடிவமைப்போடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு என அதிக வேரியண்ட் உடன் வருகிறது.

48எம்பி முதன்மை கேமரா

48எம்பி முதன்மை கேமரா

பின்புறத்தில் 48எம்பி முதன்மை கேமரா, 13 எம்பி அல்ட்ராவைடு சென்சார், 2எம்பி கூடுதல் கேமராவுடன் வருகிறது. மேலும் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமராவும் ஆண்ட்ராய்டு 11 ஆதரவும் இதில் இருக்கிறது. ஐக்யூ நியோ 5 ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 66 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் கொண்டிருக்கும். இது இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டிருக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Iqoo Neo 5 Launching Soon in india it Gets BIS Certificate

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X