Home
Mobile

iQOO ஒரே போடு.. 9000mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. புது iQOO ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனத்தின் பெரிய பேட்டரி கேபாசிட்டி கொண்ட ஸ்மார்ட்போன்களின் லிஸ்ட்டில் புதிதாக ஐக்யூ நியோ 12 (iQOO Neo 12) இடம்பெற இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துவிட்டன. பேட்டரி மட்டுல்லாமல், பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாகவும் இந்த நியோ ஸ்மார்ட்போன் இருக்கப் போகிறது.

ஐக்யூ நியோ 11 (iQOO Neo 11) ஸ்மார்ட்போனானது, கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் வெளியாகியது. ஆகவே, இந்த அக்டோபர் மாதத்தில் ஐக்யூ நியோ 12 ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், கேமரா, டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்கள் கசிந்து எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

iQOO ஒரே போடு.. 9000mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா!

ஏற்கனவே, ஐக்யூ நிறுவனத்தின் ஐக்யூ நியோ 11எஸ் (iQOO Neo 11S) ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்து ஐக்யூ 16 (iQOO 16) ஸ்மார்ட்போனும் வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் 9000mAh பேட்டரி கொண்ட மாடலாக ஐக்யூ நியோ 12 வெளியாகும் என்று விவரங்கள் கசிந்துள்ளன.

வழக்கம்போல டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக இந்த பீச்சர்கள் கசிந்துள்ளன. பிரீமியம் கேமிங் மாடலாக இருக்கும் என்பது இந்த பீச்சர்களை வைத்து சொல்லிவிடலாம். சிப்செட் முதல் டிஸ்பிளே வரையில் கேமிங் மாடலுக்கு ஏற்பவே இருக்கிறது. கேமராவில் மட்டும் வழக்கமான 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட இருக்கிறது.

ஐக்யூ நியோ 12 அம்சங்கள் (iQOO Neo 12 Specifications): 6.83 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. பிளாட் டிஸ்பிளே டிசைனில் 2K ரெசொலூஷன் கொடுக்க இருக்கிறது. மினிமம் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்க இருக்கிறது. 185Hz ரெஃப்ரெஷ் ரேட் வரையில் கிடைக்க வாய்ப்புள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் வருகிறது.

ஆகவே, பிரீமியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாக இந்த ஐக்யூ நியோ 12 ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9000mAh பேட்டரி கொடுக்கப்பட இருக்கிறது. ஃபுல் லெவல் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்க இருக்கிறது. ஆகவே, IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் எதிர்பார்க்கலாம்.

3டி அல்ட்ரா சோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக தெரியவந்துள்ளது. பட்ஜெட் விவரங்கள் மற்றும் மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ள முன்னதாக வெளியான ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போனை பார்க்க வேண்டி இருககிறது. கடந்த அக்டோபரில் இந்த நியோ 11 வெளியாகியது.

ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட்டை கொடுத்தது. அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) மட்டுமல்லாமல், கியூ2 கேமிங் சிப் கிடைத்தது. ஆகவே, ஐக்யூ நியோ 12 ஸ்மார்ட்போனிலும் பிரத்யேக கேமிங் சிப்செட் எதிர்பார்க்கலாம். ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6.0 (OriginOS 6.0) கொண்டுள்ளது.

100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7500mAh பேட்டரியை ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் சீன மார்கெட் விலை ரூ.34,000 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, இந்த ஐக்யூ நியோ 12 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.36,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். இதுவும் சீன மார்கெட் விலையாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
iQOO Neo 12 With 9000mAh Battery Snapdragon 8 Elite Gen 5 Chip Specifications Leaked Ahead Of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X