பாவம் OnePlus.. பிக் பேட்டரி போன்களின் புது ராஜா.. 10000mAh உடன் புதிய iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?
இது பிக் பேட்டரி ஸ்மார்ட்போன்களின் ஏரா (Big Battery Smartphone Era) என்றே கூறலாம். கடந்த பல ஆண்டுகளாக ஸ்மார்ட்போன் டிரெண்ட்டை கண்காணித்து வருகிறேன். 2-3 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலாக 6000mAh பேட்டரி கெப்பாசிட்டி கொண்ட ஸ்மார்ட்போன் வெளியானால் அதை ஒரு முக்கியமான செல்லிங் பாயிண்ட் ஆக பாராட்டி நானே கட்டுரை எழுதியுள்ளேன்.
ஆனால் இப்போது நிலைமை அப்படியே தலைகீழ் ஆகிவிட்டது. 6000mAh மற்றும் அதற்கும் கீழான பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள் எல்லாம் ஸ்மால் பேட்டரி கெப்பாசிட்டி என்று முத்திரை குத்தப்படுகின்றன. இந்த விலைக்கு இன்னும் கொஞ்சம் பெரிய பேட்டரி கொடுத்து இருக்கலாம் என்று நானே விமர்சனம் எழுதும் அளவிற்கு - ஸ்மார்ட்போன் டிரெண்ட் மாறிவிட்டது.

"எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்க பாத்தீயா?" என்று காமெடியாக கேட்கும் அளவிற்க்கு - ஹானர் (Honor) நிறுவனம் ஆனது 12000mAh பேட்டரி கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐக்யூ (iQOO) நிறுவனமும் இந்த போட்டிக்குள் குதித்துள்ளது
9000mAh மற்றும் 10000mAh பேட்டரி கொண்ட ஐக்யூ ஸ்மார்ட்போன்கள்: நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவலின்படி ஐக்யூ நியோ 12 (iQOO Neo 12) மற்றும் ஐக்யூ இஸட்12 டர்போ (iQOO Z12 Turbo) ஆகிய 2 மாடல்களிலும், அவற்றின் முந்தைய வெர்ஷன்களை விட மிகப்பெரிய பேட்டரிகளுடன் சோதிக்கப்படுகிறது. வழக்கம் போல இதற்கும் நாம் - அதிக திறன் கொண்ட சிலிக்கான் கார்பன் (silicon-carbon) பேட்டரிகளுக்கு தான் நன்றி கூற வேண்டும்.
மேற்குறிப்பிட்ட 2 ஐக்யூ ஸ்மார்ட்போன்களின் பொறியியல் முன்மாதிரிகள் (prototype) ஒன்று 9000mAh பேட்டரியை கொண்டிருப்பதாகவும், மற்றொன்று 10,000mAh திறன் கொண்ட ஹை-சிலிக்கான் சிங்கிள்-செல் (single-cell) பேட்டரியை கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. என்னை பொறுத்தவரை, இது உண்மையாகும் பட்சத்தில் - ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு பெரிய பிரச்ச்னை காத்திருக்கிறது.
ஏனென்றால் சமீபத்தில் நார்ட் சீரீஸின் கீழ் அறிமுகமான ஒன்பிளஸ் நார்ட் 6 (OnePlus Nord 6) மாடல் ஆனது 9000mAh பேட்டரியை கொண்டுள்ளது. நடுத்தர விலைப்பிரிவில் இந்த மாற்றத்தை (பிக் பேட்டரி) தொடங்கி வைத்த பெருமை ஒன்பிளஸ்-க்கு தான் உள்ளது. இதன் விளைவாக இந்த ஸ்மார்ட்போனின் விற்பனையும் நன்றாக உள்ளது. இந்த இடத்தில் தான் ஐக்யூவின் பிக் பேட்டரி ஸ்மார்ட்போன்கள் உள்ளே நுழைந்து, ஆட்டத்தை மாற்றும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
ஐக்யூ நியோ 12 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? முந்தைய அறிக்கைகளின்படி, ஐக்யூ நியோ 12 மாடலானது 185ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் (refresh rate) கூடிய 6.83 இன்ச் பிளாட் 2K OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட், கேமிங்கிற்கான பிரத்யேக கிராபிக்ஸ் சிப், 100W பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே (in-display) அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் IP68/IP69 ரேட்டிங் ஆகிய அம்சங்கள் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.
ஐக்யூ இஸட் 12 டர்போ ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, தற்போதைய நிலையில் இதை பற்றிய தகவல்கள் குறைவாகவே உள்ளன. இருப்பினும், இதன் முந்தைய மாடல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட்டை பயன்படுத்தியதால், வரவிருக்கும் இஸட்12 டர்போ மாடலானது குவால்காம் நிறுவனத்தின் வரவிருக்கும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 6 (Snapdragon 8 Gen 6) சிப்செட்டுடன் வெளியாகலாம்; இதன் மூலம் இது செயல்திறனை மையமாக கொண்ட மற்றொரு முக்கிய ஸ்மார்ட்போனாக இருக்கலாம்.
10000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள் பாதுகாப்பானவைகளா? நவீனகால 10000mAh திறன் கொண்ட போன்கள் பாதுகாப்பானவைகள் தான், ஏனெனில் அவை சாதாரண போன்களை போலவே அதே லித்தியம்-அயன் அல்லது லித்தியம்-பாலிமர் தொழில்நுட்பத்தை தான் பயன்படுத்துகின்றன. பிக் பேட்டரி ஸ்மார்ட்போன்கள் ஆனது கடுமையான பல-நிலை பாதுகாப்பு சோதனைகளிலும் தேர்ச்சி பெறுகின்றன. இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் சார்ஜர் தான் - மோசமான வயரிங் அல்லது அதிக வெப்பமாவதை தவிர்க்க, எப்போதும் அதிகாரப்பூர்வ பிராண்டுகளின் சார்ஜரை பயன்படுத்தவும், வாங்கவும் நாம் பரிந்துரைக்கிறேன்.


Click it and Unblock the Notifications