Home
Mobile

iQOO போட்ட போடு.. 9000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. புது Neo ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனத்தின் ஐக்யூ நியோ 12 (iQOO Neo 12), ஐக்யூ நியோ 12 டர்போ (iQOO Neo 12 Turbo) மற்றும் ஐக்யூ 16 (iQOO 16) ஸ்மார்ட்போன்களின் பேட்டரி பீச்சர்கள் கசிந்துள்ளன. பெரிய பேட்டரி கொண்ட மாடல்களாக களமிறங்க இருக்கின்றன. இதில் ஐக்யூ நியோ 12 ஸ்மார்ட்போன் ஒட்டுமொத்த எதிர்ப்பாப்பையும் எகிற வைத்துள்ளது.

இந்த மூன்று மாடல்களின் பீச்சர்கள் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கசிந்துள்ளன. இதில் ஐக்யூ 16 ஸ்மார்ட்போனில் 2என்எம் ஸ்னாப்டிராகன் எலைட் ஜென் 6 ப்ரோ (2nm Snapdragon 8 Elite Gen 6 Pro) சிப்டெட் மற்றும் 8500mAh பேட்டரி கிடைக்க இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இருக்கிறது.

iQOO போட்ட போடு.. 9000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே!

ஐக்யூ நியோ 12 டர்போ ஸ்மார்ட்போனை பார்க்கையில், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 6 (Snapdragon 8 Gen 6) சிப்செட்டை கொடுக்க இருக்கிறது. 10000mAh கேபாசிட்டி கொண்ட சிங்கிள் சிலிகான் செல் பேட்டரியை கொடுக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே கசிந்துள்ளன. இருப்பினும், ஐக்யூ நியோ 12 ஸ்மார்ட்போன் மீது ஒட்டுமொத்த கவனமும் சென்றுள்ளது.

ஏனென்றால், இதில் 9000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட இருக்கிறது. டர்போ மாடலை ஒப்பிடுகையில் விலையும் கம்மியாக இருக்கும் என்பதால், உலகளவில் இருக்கும் ஐக்யூ பிரியர்கள் இந்த மாடலுக்காக வெயிட்டிங் மோடில் இருக்கின்றனர். பேட்டரி மட்டுமல்லாமல், முக்கிய பீச்சர்களும் ஏற்கனவே கசிந்துவிட்டன.

ஐக்யூ நியோ 12 அம்சங்கள் (iQOO Neo 12 Specifications): 6.83 இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 2K ரெசொலூஷன் மற்றும் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட்டை கொடுக்க இருக்கிறது. அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட இருக்கிறது.

ஃபுல் லெவல் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்க இருக்கிறது. ஆகவே, ஐபி69 ரேட்டிங் எதிர்பார்க்கலாம். இந்த பீச்சர்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. விலை மற்றும் வெளியீட்டு விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும், ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொண்டால், இந்த மாடல் குறித்து யூகிக்க முடியும்.

ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் வெளியாகியது. ஆகவே, இந்த ஐக்யூ நியோ 12 ஸ்மார்ட்போனையும் அக்டோபர் மாதத்தில் எதிர்பார்க்கலாம். சீன மார்கெட்டில் ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,000 பட்ஜெட்டுக்குள் இருந்தது. ஆகவே, இந்த நியோ 12 மாடலை ரூ.40,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.

ஐக்யூ நியோ 11 அம்சங்கள் (iQOO Neo11 Specifications): இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3 என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட், அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் கியூ2 கேமிங் சிப் (Q2 Gaming Chip) கிடைக்கிறது. 6.82 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே வை கொடுத்துள்ளது.

எச்டிஆர்10+ (HDR10+), 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவுக்கு சோனி லைட்டியா 700வி சென்சார் கிடைக்கிறது. ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கிடைக்கிறது. 7500mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஆகவே, பேட்டரியில் அப்கிரேட் இருப்பது தெரிகிறது.

Best Mobiles in India

English summary
iQOO Neo 12 9000mAh Battery iQOO Neo 12 Turbo 10000mAh Battery Specifications Leaked Ahead Of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X