வெயிட் பண்ணா இதுக்கு பண்ணனும்.. 7500mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே.. OIS கேமரா.. எந்த மாடல்?
ஐக்யூ நியோ 11 (iQOO Neo 11) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உறுதியாகியதை தொடர்ந்து, பேட்டரி, டிஸ்பிளே மற்றும் கலர் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகின. இப்போது, சிப்செட் மற்றும் விசி கூலிங் சிஸ்டம் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த பீச்சர்களை பார்க்கும்போது, இதுவொரு பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மாடலாக இருப்பது தெரிகிறது. இந்த ஐக்யூ நியோ 1 ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் வெளியீட்டு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஐக்யூ 15 ஸ்மார்ட்போனுக்கு அடுத்து ஒட்டுமொத்த கவனமும் ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் பக்கம் திரும்பி இருக்கிறது. இது மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு கிடைக்க இருப்பதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. அக்டோபர் 30ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பீச்சர்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

ஐக்யூ நியோ 11 அம்சங்கள் (iQOO Neo 11 Specifications): இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 2K எல்டிபிஓ (LTPO) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இதுவொரு பிஓஈ கியூ10பிளஸ் (BOE Q10+) டிஸ்பிளே மாடலாகும். மேலும், ஆன்டி-ரெஃப்ளெக்டிவ் கோட்டிங் (Anti-reflective Coating) கிடைக்க இருக்கிறது. இதுபோக 144 FPS கேமிங் அவுட் கிடைக்கிறது.
2592Hz PWD டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டிசி டிம்மிங் கிடைக்கிறது. ஐ புரொடெக்டன் 2.0 (Eye Protection 2.0), 3200Hz இன்ஸ்டன்ட டச் சாம்பிளிங் ரேட் மற்றும் சூப்பர்-சென்சிடிவ் டச் சிப் (Super-sensitive Touch Chip) கிடைக்கிறது. ஆகவே, டிஸ்பிளே பர்ஃபாமென்ஸ் பிரீமியம் கேம்களுக்கு ஏற்ப இருக்கும். இந்த ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போனில் 7500mAh பேட்டரி கிடைக்கிறது.
இதுவொரு 2ஆவது ஜெனரேஷன் செமி-சாலிட் பேட்டரியாகும். 20 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக் செய்தாலும், ஹீட் கன்ட்ரோல் கிடைக்கும். குளோபல் டைரெக்ட் டிரைவ் பவர் 2.0 (Global Direct Drive Power 2.0) சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக ஹீட் கன்ட்ரோல் கொடுக்க 8K ஐஸ் டோம் விசி கூலிங் சிஸ்டம் (Ice Dome VC Cooling) கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப லேக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் கொடுக்க ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எஸ்ஓசி (Octa Core Snapdragon 8 Elite SoC) கிடைக்கிறது. இதுபோக வழக்கமாக கிடைக்கும் செல்ப்-டெவலப்ட் கியூ2 கேமிங் சிப் (Q2 Gaming Chip) சிப்செட் கிடைக்கிறது. மேலும், மான்ஸ்டர் சூப்பர் கோர் என்ஜின் (Monster Super Core Engine) சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போனில் ஓர்ஜின் ஓஎஸ் 6 (Origin OS 6) கிடைக்க இருக்கிறது. மேலும், ஃபேசிங் தி விண்ட் பர்பிள் (Facing the Wind Purple), ஷேடோ பிளாக் (Shadow Black) மற்றும் லைட் ஒயிட் (Light White) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. மேலும், டூயல் டோன் கொடுக்கும்படி பிக்சல் ஸ்குவார் ஆரஞ்ச் (Pixel Square Orange) கலரிலும் வர இருக்கிறது.
இந்த பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன. மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை பார்க்கையில், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) வருகிறது. ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக் இருக்கிறது. சீனாவில் ரூ.30,000 பட்ஜெட்டில் வெளியாகலாம். இந்தியாவில் ரூ.34,999 பட்ஜெட்டில் கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications








