7500mAh பேட்டரிக்கு அடிச்சான் பாரு iQOO.. அக்.30 தேதிக்கு சம்பவம்.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனத்தின் நியோ சீரிஸ் மாடல்களில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ஐக்யூ நியோ 11 (iQOO Neo 11) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உறுதியாகி இருக்கிறது. பேட்டரி, டிசைன் மற்றும் கலர் விவரங்களும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 7500mAh பேட்டரி, 2K ரெசொலூஷன் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் போன்ற பீச்சர்களுடன் களமிறங்க இருக்கிறது. இந்த ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போனில் என்னென்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம், விலை மற்றும் வெளியீடு எப்படி, முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஐக்யூ 15 ஸ்மார்ட்போனுடன் இந்த ஐக்யூ நியோ 11 மாடலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது வெளியாகவில்லை. ஆனால், அந்த ஸ்மார்ட்போன் வெளியாகிய ஒரே நாளில் இதன் வெளியீட்டு தேதி உறுதியாகி இருக்கிறது. அக்டோபர் 30ஆம் தேதி இந்த ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் சீன மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. அதன்பிறகு குளோபல் மார்கெட்டில் வெளியாகும்.

இந்தியாவில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போன் நவம்பர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. ஆகவே, இந்த நியோ 11 ஸ்மார்ட்போனை டிசம்பர் மாதத்தில் எதிர்பார்க்கலாம். இந்த வெளியீட்டு தேதியுடன் ஃபேசிங் தி விண்ட் பர்பிள் (Facing the Wind Purple), பிக்சல் ஸ்குவார் ஆரஞ்ச் (Pixel Square Orange), ஷேடோ பிளாக் (Shadow Black) மற்றும் லைட் ஒயிட் (Light White) ஆகிய கலர்களில் உறுகியாகி இருக்கிறது.
ஐக்யூ நியோ 11 அம்சங்கள் (iQOO Neo 11 Specifications): இந்த நியோ ஸ்மார்ட்போனில் 7500mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. 2K ரெசொலூஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே வர இருக்கிறது. மேலும், கேமிங் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும்படி ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கிடைக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கிடைக்க இருக்கிறது.
மெட்டல் மிடில் ஃபிரேம் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. மற்ற பீச்சர்கள் வெளியாகவில்லை. இருப்பினும், மார்கெட்டில் சில பீச்சர்கள் கசிந்துள்ளன. ஆகவே, இதில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஓர்ஜின் ஓஎஸ் 6 (OriginOS 6) வர இருக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் எதிர்பார்க்கலாம்.

இந்த பீச்சர்களே தெரியவந்துள்ளன. பட்ஜெட் விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும், மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.31,999ஆக இருக்கிறது. ஆகவே, இதை ரூ.34,999 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். இந்தியாவில் ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஆகவே, அதன் பீச்சர்களை பார்ப்போம்.
ஐக்யூ நியோ 10 அம்சங்கள் (iQOO Neo 10 Specifications): இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆனால், நியோ 11 ஸ்மார்ட்போனில் 2K ரெசொலூஷனாக அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைக்கிறது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவில் ஓஐஎஸ் மற்றும் சோனி சென்சார் கிடைக்கிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி கிடைக்கிறது. நியோ 11 ஸ்மார்ட்போனின் பேட்டரி கேபாசிட்டி அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஃபாஸ்ட் சார்ஜிங் குறைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








