டிசைன், வசதிகளில் தூள்.. 7500mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. புது iQOO 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ நியோ 11 (iQOO Neo 11) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. விரைவில் அதாவது இந்த மாதம் இந்தியாவிலும், உலக சந்தையிலும் இந்த புதிய ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள்.
ஐக்யூ நியோ 11 அம்சங்கள் (iQOO Neo 11 specifications): 6.8-2இன்ச் 2K+ BOE Q10+ LTPO அமோலெட் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் எச்டிஆர் 10 பிளஸ், 1.07 பில்லியன் கலர்ஸ், டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 18000 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் உடன் ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போனில் உள்ளது. இதுதவிர Q2 கேமிங் சிப் வசதியும் இதில் உள்ளது.
16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரிஜின்ஓஎஸ் 6.0 (OriginOS 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி LYT700V மெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) உள்ளிட்ட அம்சங்களும் இதில் உள்ளன.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் இதில் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, குளோனாஸ், ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போனில் உள்ளது.

7500mAh பேட்டரி வசதியுடன் ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
ஐக்யூ நியோ 11 விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ நியோ 11 மாடலின் விலை 2599 yuan (இந்திய மதிப்பில் ரூ.32,460)
16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ நியோ 11 மாடலின் விலை 2899 yuan (இந்திய மதிப்பில் ரூ.36,210)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ நியோ 11 மாடலின் விலை 2999 yuan (இந்திய மதிப்பில் ரூ.37,460)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ நியோ 11 மாடலின் விலை 3299 yuan (இந்திய மதிப்பில் ரூ.41,210)
16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ஐக்யூ நியோ 11 மாடலின் விலை 3799 yuan (இந்திய மதிப்பில் ரூ.47,445)


Click it and Unblock the Notifications








