நாளைக்கு 7500mAh பேட்டரி உடன் லான்ச் ஆகும் புது iQOO 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?
ஐக்யூ நியோ 11 (iQOO Neo 11) ஸ்மார்ட்போன் நாளை (அக்டோபர் 30) சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஐக்யூ நியோ 11 அம்சங்கள் (iQOO Neo 11 specifications): ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் உடன் ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

6.8-இன்ச் 2கே ஒஎல்இடி பிளாட் டிஸ்பிளே (2K OLED flat display) டிஸ்பிளே வசதியடன் இந்த புதிய ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
இந்த ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
அதேபோல் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஐக்யூ நியோ 11 போன் அறிமுகமாகும். மேலும் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியும் இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனில் உள்ளது. யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) போன்ற அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.
குறிப்பாக 7500mAh பேட்டரி உடன் ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

அதுவும் IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஐக்யூ போனில் உள்ளன.
ஓர்ஜின் ஓஎஸ் 6 (Origin OS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் இந்த ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கடைக்கும். ஐக்யூ நியோ 11 போன் ரூ.35,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








