Home
Mobile

அறிமுகமானது புதிய ஐக்யூ 5ஜி போன்.. 9100எம்ஏஎச் பேட்டரி, IP69 ரேட்டிங், 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

ஐக்யூ நியோ 11 அல்ட்ரா (iQOO Neo 11 Ultra) ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஐக்யூ நிறுவனம். விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் அறிமுகமாகும். இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஐக்யூ நியோ 11 அல்ட்ரா அம்சங்கள் (iQOO Neo 11 Ultra Specifications): 6.83-இன்ச் 2கே Visionox F2 எல்டிபிஎஸ் அமோலெட் டிஸ்பிளே உடன் இந்த புதிய ஐக்யூ நியோ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3200×1440 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.07 பில்லியன் கலர்ஸ், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அறிமுகமானது புதிய ஐக்யூ 5ஜி போன்.. 9100எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

தரமான ஆக்டா-கோர் டைமன்சிட்டி 9500எம் 3என்எம் பிராசஸர் (Octa-Core Dimensity 9500M 3nm processor) உடன் இந்த ஐக்யூ நியோ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் ஏஆர்எம் மாலி-ஜி1 அல்ட்ரா எம்சி12 ஜிபியு (Arm Mali-G1 Ultra MC12 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய ஐக்யூ போனில் உள்ளன.

OriginOS 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஐக்யூ நியோ 11 அல்ட்ரா போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவும் இந்த போனில் உள்ளது.

50எம்பி LYT700Vமெயின் சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஐக்யூ நியோ 11 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

3டி அல்ட்ராசோனிக் இன் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொண்டுள்ளது ஐக்யூ நியோ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன். 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.2 பிஇ, கலிலியோ (Galileo), GLONASS (குளோனாஸ்), புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

9100எம்ஏஎச் பேட்டரி உடன் ஐக்யூ நியோ 11 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. விண்ட் சேஸர்இ பிளாக் மற்றும் ஒயிட் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

அறிமுகமானது புதிய ஐக்யூ 5ஜி போன்.. 9100எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

ஐக்யூ நியோ 11 அல்ட்ரா விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ நியோ 11 அல்ட்ரா மாடலின் விலை 3399 yuan (இந்திய மதிப்பில் ரூ.48,250)-ஆக உள்ளது.
16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ நியோ 11 அல்ட்ரா மாடலின் விலை 3799 yuan (இந்திய மதிப்பில் ரூ.53,925)-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ நியோ 11 அல்ட்ரா மாடலின் விலை 3999 yuan (இந்திய மதிப்பில் ரூ.56,765)-ஆக உள்ளது.
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ நியோ 11 அல்ட்ரா மாடலின் விலை 4399 yuan (இந்திய மதிப்பில் ரூ.62,440)-ஆக உள்ளது.

தற்போது இந்த போனின் விற்பனை சீனாவில் தொடங்கி உள்ளது.

Best Mobiles in India

English summary
iQOO Neo 11 Ultra with 9100mAh battery launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X