Home
Mobile

வாங்குனா இப்படி வாங்கனும்.. 9100mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. OIS கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

சீன ஸ்மார்ட்போன் மார்கெட் மட்டுமல்லாமல், மற்ற நாடுகளின் மார்கெட்டும் எதிர்பார்க்கும்படியான பீச்சர்களுடன் ஐக்யூ நியோ 11 அல்ட்ரா (iQOO Neo 11 Ultra) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. 9100mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஐஎஸ் கேமரா போன்ற பீச்சர்களில் பட்டையை கிளப்ப இருக்கிறது. இந்த ஐக்யூ நியோ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதோ.

வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி சீன மார்கெட்டில் இந்த ஐக்யூ நியோ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த வெளியீட்டு முன்னதாகவே முழு பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துவிட்டன. அதேபோல ரேம் மற்றும் மெமரி வேரியண்ட்களும் கசிந்துவிட்டன. இதில் பெரும்பாலான பீச்சர்களை ஐக்யூ நிறுவனம் உறுதியும் செய்து வருகிறது.

வாங்குனா இப்படி வாங்கனும்.. 9100mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்!

ஐக்யூ நியோ 11 அல்ட்ரா அம்சங்கள் (iQOO Neo 11 Ultra Specifications): 6.83 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது. 2K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 9500 (MediaTek Dimensity 9500) சிப்செட் கொண்ட மாடலாக இந்த ஐக்யூ நியோ 11 அல்ட்ரா வெளியாக இருக்கிறது.

100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9100mAh பேட்டரியை கொடுத்து இருக்கிறது. ஆகவே, கேமிங் பிரியர்களுக்கு அதிக பேக்கப் கொடுக்கும் மாடலாக இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமராவை கொடுத்து இருக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.

செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 16 எம்பி செல்பீ கேமராவை இந்த ஐக்யூ நியோ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொடுக்கப்பட்டு இருக்கிறது. அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic In-display Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த ஐக்யூ நியோ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மாடல்கள் வெளியாக இருக்கின்றன. மேலும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் மாடல்களும் வெளியாக இருக்கின்றன.

எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (X-axis Linear Motor) கிடைக்கிறது. மெட்டல் மிடில் ஃபிரேம் (Metal Middle Frame) கிடைக்கிறது. 8.6 எம்எம் தடிமன் மற்றும் 225 கிராம் எடை கொடுத்துள்ளது. IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மூன்று கலர்களில் இந்த ஐக்யூ நியோ 11 அல்ட்ரா வெளியாக இருக்கிறது.

ஆகவே, லைட் ஒயிட் (Light White), ஷேடோ பிளாக் (Shadow Black) மற்றும் விண்ட் சேசர் (Wind Chaser) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. சீன மார்கெட்டில் வெளியாகிய பிறகு குளோபல் மற்றும் மாற்ற மார்கெட்களில் எதிர்பார்க்கலாம். இந்தியாவில் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஐக்யூ இசட்11 அடுத்த வாரம் வெளியாகிறது.

Best Mobiles in India

English summary
iQOO Neo 11 Ultra With 9100mAh Battery 16GB RAM Specifications Leaked Ahead of China Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X