Home
Mobile

யாரு சாமி அவன்.. SONY கேமரா.. 9100mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த கேமிங் பிரியர்களையும் தட்டித் தூக்கும்படியான பேட்டரி, டிஸ்பிளே, சிப்செட் கொண்ட மாடலாக வெளியாக இருக்கும் ஐக்யூ நியோ 11 அல்ட்ரா (iQOO Neo 11 Ultra) கேமரா பீச்சர்கள் தெரிவந்துள்ளது. இந்த பீச்சர்களிலும் பட்டையை கிளப்பு இருப்பது தெரிகிறது. இதுகுறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டில் புதிய நியோ சீரிஸ் மாடலாக ஆகஸ்ட் 18ஆம் தேதி ஐக்யூ நியோ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, முழு பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துவிட்டன. ரேம், ஸ்டோரேஜ் மற்றும் கலர் வேரியண்ட்களின் விவரங்களும் கசிந்துவிட்டன. இப்போது, கேமரா சென்சார் மற்றும் டெக்னாலஜி விவரங்கள் தெரியவந்துள்ளன.

இந்த ஐக்யூ நியோ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்க இருக்கிறது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மட்டுமல்லாமல், பயோனிக் ஐ டெக்னாலஜி (Bionic Eye Technology) கிடைக்கிறது. லைவ் போட்டோ (Live Photo) பீச்சர் கிடைக்கிறது. இந்த பீச்சர்களுடன் சாம்பிள் போட்டோக்களும் வெளியாகி இருக்கின்றன.

ஆகவே, கேமிங் பிரியர்களுக்கான சிப்செட் மற்றும் பேட்டரி மட்டுமல்லாமல், கேமரா பிரியர்களுக்கான மாடலாகவும் இந்த ஐக்யூ நியோ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பது தெரிகிறது. இதனால், சீன மார்கெட் மட்டுமல்லாமல் இந்தியா உள்ளிட்ட மற்ற மார்கெட்களிலும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இப்போது, மற்ற பீச்சர்களை பார்க்கலாம்.

யாரு சாமி அவன்.. SONY கேமரா.. 9100mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. மாடல்?

ஐக்யூ நியோ 11 அல்ட்ரா அம்சங்கள் (iQOO Neo 11 Ultra Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 (Octa Core MediaTek Dimensity 9500) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கிடைக்கிறது. 2K ரெசொலூஷன் கொண்ட 6.83 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை இந்த ஐக்யூ நியோ 11 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 9100mAh பேட்டரி கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் சோனி சென்சார் கிடைக்க இருக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கிடைக்க இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மாடலும் கிடைக்க இருக்கிறது. எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (X-axis Linear Motor) மற்றும் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது.

பெரிய பேட்டரி கிடைப்பதால், 8.6 எம்எம் தடிமன் கொண்டுள்ளது. மேலும், 225 கிராம் எடை கொடுக்கப்பட்டு உள்ளது. IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்ட மாடலாக இந்த ஐக்யூ நியோ 11 அல்ட்ரா இருக்கிறது. லைட் ஒயிட் (Light White), ஷேடோ பிளாக் (Shadow Black) மற்றும் விண்ட் சேசர் (Wind Chaser) கலர்களில் கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
iQOO Neo 11 Ultra With 50MP SONY Sensor Camera Bionic Eye Technology Leaked Ahead of China Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X