நாளை அறிமுகமாகும் புது iQOO 5ஜி போன்.. 9100எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனம் நாளை (ஆகஸ்ட் 18) ஐக்யூ நியோ 11 அல்ட்ரா (iQOO Neo 11 Ultra) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஐக்யூ நியோ 11 அல்ட்ரா அம்சங்கள் (iQOO Neo 11 Ultra Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 9500எம் (MediaTek Dimensity 9500M) சிப்செட் உடன் ஐக்யூ நியோ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

குறிப்பாக 6.83-இன்ச் பிளாட் 2கே ஒஎல்இடி டிஸ்பிளே உடன் ஐக்யூ நியோ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளியாகும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதுவும் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் ஐக்யூ நியோ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனின் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
அதேபோல் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஐக்யூ நியோ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
ஐக்யூ நியோ 11 அல்ட்ரா போன் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistant) உடன் அறிமுகமாகும். அதேபோல் இந்த புதிய ஐக்யூ ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் ஐக்யூ நியோ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) போன்ற வசதிகள் இந்த போனில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த ஐக்யூ நியோ 11 அல்ட்ரா மாடல் 9100எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகமாகும். ஆகவே இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளும் உள்ளன.
மேலும் 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ஐக்யூ நியோ 11 அல்ட்ரா மாடல் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications